‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடலில் மற்றும் கடற்கரையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இரத்த தானம்

நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 120க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு … Read more

வெசாக் பௌர்ணமி செய்தி

மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத … Read more

வெசாக் நோன்மதி தினச் செய்தி

வெசாக் நோன்மதி தினமானது அனைத்து பௌத்தர்களுக்கும் மிகவும் புனிதமான நாளாகும். வரலாறு நெடுகிலும் பௌத்த மதத்திலிருந்து நாம் பெற்ற ஒழுக்க விழுமியங்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததுடன், உலகின் முன் பெருமையுடன் எழுந்து நிற்கவும் எமக்கு உதவியது. உலகின் இயல்பைப் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் பௌத்தத்தின் வழியை இன்று முழு உலகமும் பின்பற்றுவதற்கான தேவை எழுந்துள்ளது. பௌத்த விழுமியங்களைச் தேடிச் செல்லும் நாடுகள் அதற்காக பௌத்த நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. … Read more

புதிய தொழில் சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. ‘2048ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் … Read more

12 வருடங்களின் பின்னர் இலங்கையில் டெங்கு 03 வகை வைரஸ் பரவியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட 90 பரிசோதனைகளில் டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 12 வருடங்களாக நாட்டில் காணப்படாத ஒரு வகையான வைரஸ் என்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எமது உடலில் இந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லை என்றும், இதன் காரணமாக இந்நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் … Read more

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது – கடற்றொழில் அமைச்சர்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் மக்கள் பிரதிநிதிகள் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் … Read more

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியால் அடையாள ரீதியாக புலமைப்பிரிசில் வழங்கி வைப்பு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர … Read more

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார். நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை … Read more