சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 836 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் மே 01ஆம் திகதி அதிகாலை கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன், ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செயய்பப்பட்டுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தொடர்ச்சியான ரோந்து மற்றும் … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் … Read more

2048 ஆம் ஆண்டை இலங்கையின் அபிவிருத்தி ஆண்டாக மாற்ற நாம் ஒன்றாக கைகோர்ப்போம்

புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை மாற்றுவோம். டி.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.மக்கள் சபை வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது – ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்விற்கு வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி உரை.பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக … Read more

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று உலகளாவிய ரீதியில் மே தினம் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் தினமாகவும் கொண்டாடப்படும் உலக தொழிலாளர் தினமானது, 18ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் 12 முதல் 18 மணி நேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கும், தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியே மே தினம் உருவாக காரணமாக அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் … Read more

எந்த ஒரு உடன்படிக்கையின் போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நாம் புறக்கணித்துவிட மாட்டோம் – பிரதமர்

உழைக்கும் மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் போசிக்கப்பட்ட பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தாய்நாட்டில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் மத்தியிலேயே இன்று நாம் அதைக் கொண்டாடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகின் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. அது எமது பாரம்பரியமும் கூட. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு விவசாயிகள் ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முதலில் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். … Read more

நாட்டில் செயற்கை நுண்ணறிவின்(Artificial Intelligence) பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட … Read more

“Women Plus Bazaar 2023” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Women Plus Bazaar 2023” கண்காட்சி (30) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது. கொழும்பில் உள்ள எகிப்து அரபுக் குடியரசு தூதரகம், கொழும்பு மாநகர சபை மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள்பேரவை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை … Read more

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ, … Read more