சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் காலியில் பிரபாண்டமான இலக்கிய விழா (Galle Literary Festival)

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக, பல்வேறு கலை அம்சங்கள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகளை காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அந்தத் … Read more

“புராஜெக்ட் ரன்“ விருது பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகள்

எம்மிலிருந்து நாட்டிற்கு – நாட்டின் முன்னேற்றத்திற்கு’ எனும் தொனிப்பொருளில் மதர் ஸ்ரீலங்கா அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “புராஜெக்ட் ரன்“ திட்டத்தின் பரிசளிப்பு விழா (28) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. பாடசாலையில் அல்லது பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்தில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் திட்டம், புராஜெக்ட் ரன் திட்டத்தின் மூலம் பாடசாலை பிள்ளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தேசப்பற்றை வளர்த்தல், படைப்பாற்றல் – சுதந்திரம் – தலைமைத்துவ திறன் – திட்ட … Read more

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் யாழ்ப்பாணத்தில்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்ப, குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது – சாகல ரத்நாயக்க. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக … Read more

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலும் கிண்ணியா பாலத்தை சூழவுள்ள பகுதியிலும் மின் விளக்குகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நபர்களை அடையாளம் காண விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை இலங்கை கடற்படையினர் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள் மற்றும் எட்டு (08) டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு … Read more

கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவகத்தின் (Institute for Security Governance – ISG) வளங்களைக் கொண்டு கடற்படைத் தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவு பெற்றது. இதன்படி, கடற்படையில் மனித வள முகாமைத்துவத்தை அதிகரிப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த கடல்சார் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அது தொடர்பான … Read more

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் உட்பட சட்டவிரோத கடத்தலை எதிர்த்து கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, 2023 ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான … Read more

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் விரைவில் நிறுவப்படும் – ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த (27) நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் … Read more

சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 90 பேருக்கு ஜனாதிபதி விருதுகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜனாதிபதி உறுதி.உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான … Read more

விவசாயத்துறை மற்றும் தோட்டப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை … Read more