நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

மே மாதம் இறுதி வரை அதிக வெப்பம்

இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. மே மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிப்பதனால், அதன் பின்னர் இந்த நிலை குறைந்துவிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பூகோள காலநிலை மாற்றங்களினால் … Read more

குருநகர் கடற்கரையை சுத்தம் செய்த இராணுவத்தினர்

புவி தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 ஆவது காலாட்படை பிரிவின் படையினரால் யாழ் குருநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. படையினரால் (24) முன்னெடுக்கப்பட்ட இச் சமூகப் திட்டத்தில் கடற்கரையோரப் பகுதியில் காணப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று கேன்கள் மற்றும் ஏனைய குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம், கரையோர மற்றும் கடல் … Read more

முதல் டெஸ்ட் சதம் அடித்த நிஷான் மதுஷ்க….

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (26) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன்படி, 115 ஓட்டங்கள் எடுத்திருந்த திமுத் கருணாரத்ன, மதிய உணவுக்கு முன் … Read more

கொரியா தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின் பிரதானி இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை எட்டாயிரமாக அதிகரிக்க உடன்பாடு தெரிவித்துள்ளரர். கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு அதாவது தற்போது இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள தயாரிப்பு பிரிவில் 600 பேரை ,கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிப்புத் துறைகளில் தொழில் … Read more

இன்று (26) முதல் 02 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று (26) முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மேல் மாகாணம், உள்ளூராட்சி நிறுவனங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார். இன்று (26) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ‘டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மேல் மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்’ என்ற … Read more

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு தொழிற்பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் தொழிற்பயிற்சியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்பதுடன், அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (26) அமைச்சர், ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு தொழிற்பயிற்சி கட்டாயமானது. கடவுச் சீட்டுக்களை பெற்றால் மாத்திரம் வெளிநாடு … Read more

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன்

21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி, சர்வதேசத்தில் இலங்கையின் பெயரை உயர்ந்த நிலையில் வைக்கப்படும் – மாத்தறை ராகுல கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் … Read more

இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க 'ஏ' அணி அறிவிப்பு

இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணியுடன் நான்கு நாள் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க ‘ஏ’ கிரிக்கட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. போட்டி அட்டவணை வருமாறு :முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 4 ஆம் திகதி – பல்லேகலஇரண்டாவது ஒருநாள் போட்டி … Read more

ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு அரச அனுசணை

இலங்கை ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு முழுமையான அரச அனுசரணை வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில் மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு வருடங்களுக்கு ஒரு முறை … Read more