அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் – அமைச்சர் பந்துல குணவர்தன

அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடகதாதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், அடுத்த சில வருடங்களில் பணவீக்கம் குறைவடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், பணவீக்கம் குறைவினால் பொருட்களின் விலை குறைவதில் பாதிப்பு உள்ளதா? என … Read more

நாட்டில் அதிகமாக இருந்த மருந்து தட்டுப்பாடு இன்று வெகுவாக குறைந்துள்ளது – சுகாதார அமைச்சர் 

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் … Read more

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிரந்தர வீதிப் போக்குவரத்து அனுமதி பத்திரம் எதனையும் வழங்கவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிரந்தர வீதிப் போக்குவரத்துக்கான அனுமதி பத்திரம் எதையும் வழங்கவில்லை என்று அதன் தலைவர் தனக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார். தனியார் பஸ்களுக்கு 35 அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப் பத்திரங்கள் அரசியல் அதிகாரத்தில் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாம் … Read more

நுவரெலியாவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கு குழு

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், நுவரெலியாவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டிடங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலணியொன்றை நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவையின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் 01.05.2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை விதிக்கவும் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் … Read more

நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கையில் ஆய்வு சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ள நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் தூதுக்குழு நேற்று (24) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். நைஜீரியாவின் அபுஜா (Abuja) நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லுரியின் 31வது பணியாளர் படிப்பை படிக்கின்ற 13 மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களை உள்ளடக்கிய இந்த 24 உறுப்பினர்களின் தலைவராக எயார் கமடோர் Osichinaka Chedu UBADIKE பணியாற்றுகிறார். அதன்படி, இலங்கைக்கு வருகை தந்த இந்த தூதுக்குழுவின் தளபதி எயார் … Read more

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை

கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர்,ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் டபிய்யூ. சரத் குமார,கிங்குசல … Read more

26 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் பலாலி அந்தோனிபுரம் கடற்கரைப் பகுதியில் 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 26 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார். கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுபடுத்த தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை … Read more

ஆசியாவின் மிகச்சிறந்த விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டும்

அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்குள் மேற்படி விடயமும் உள்ளடங்கும் – ஜனாதிபதி தெரிவிப்பு ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு … Read more

பெருமளவான உள்நாட்டு வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்ற “வசத் சிரிய 2023”

புத்தாண்டு நிகழ்வுகளை ஜனாதிபதியும் பார்வையிட்டார். வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.“வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (22) கொழும்பு சங்கிரீலா மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது . “வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகியாக கொடிகாவத்தயை சேர்ந்த இருஷி காவ்யா அபஷேக தெரிவு செய்யப்பட்டதோடு, இரண்டாம் இடத்தை மொறட்டுவையை சேர்ந்த தாருகா ரஷ்மினியும் மூன்றாம் இடத்தை குருநாகல் கல்கமுவையை சேர்ந்த சுபாஷினி புல்பமாலாவும் பெற்றுக்கொண்டனர்.“வசத் … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

2023 ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் … Read more