மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உடனடி தொலைபேசி சேவை

மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உடனடி தொலைபேசி சேவை ஒன்றை இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவமனை மற்றும் அந்நாட்டின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. நாட்டில் வாழும் எந்தவொரு நபருக்கும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக ” Help Line For Free Medical” என்ற ஹொட்லைன் சேவையொன்று அண்மையில் ஆரம்பித்த வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் கொள்ளுப்பிட்டி சுற்றுலா விடுதியில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்த அழைப்பு சேவை மற்றும் … Read more

சுதுவெல்லை புத்தாண்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன. இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றதோடு, புத்தாண்டு அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஹஷினி சமுதிகா, இரண்டாம் இடத்தைப் பெற்ற செனுகி ரதீஷா, மூன்றாம் இடத்தைப்பெற்ற லக்‌ஷிகா இஷாரா ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் … Read more

பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் மே மாதம் 15 ஆம் திதிக்குள் விநியோகிக்கப்படும்

மே மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை 80ம% பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், தற்போது 85% சீருடைகள் விநியேகிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீதமுள்ள சீருடைகளை மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

சகோதரத்துவத்தைப் பாதுகாத்து, அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கிய சிறந்த சமூகத்திற்கான போதனைகளை கடைப்பிடிப்போம்.

இலங்கை சமூகத்தின் இஸ்லாமிய சகோதரத்துவத்தைப் பாதுகாத்து, அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கிய சிறந்ததோர் சமூகத்திற்கான போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்போமஎன்று பிரதமர் தினேஷ் குனவர்தன தனது நொன்புப் பெரநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் பன்னெடுங்காலமாக ரமழான் காலத்தில் தங்களின் சமயக் கிரியைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு, ஏனையவர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்கிவருகின்றனர். உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான மனிதாபிமான உணர்வை … Read more

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் … Read more

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவடையும்

இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும்- பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களக் விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது … Read more

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்பணிக்கின்றனர். ரமழான் மாதம், நோன்புநோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசணை மற்றும் தியாகம் மற்றும் … Read more

“வசத் சிரிய – 2023” புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன

வசத் சிரிய – 2023 புத்தாண்டு அழகிக்கு தங்கப் பரிசுடன் பணப்பரிசு. புத்தாண்டு அழகனுக்கு 150,000 பணப்பரிசுடன் பெறுமதியான பரிசுகள்.மரதன் ஓட்டப் (ஆண்கள்) போட்டியின் முதலிடத்திற்கு 75,000 ரூபா பரிசு, பெண்கள் பிரிவில் முதலிடத்திற்கு 50,000 ரூபா பரிசு.ஸ்டேண்டட் சைக்கிளோட்டம் (ஆண்கள்) பிரிவின் முதலிடத்திற்கு 100,000 ரூபா பெண்கள் பிரிவின் முதலிடத்திற்கு 50,000 ரூபா.கொழும்பு சங்கிரீலா திடலில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ‘வசத் சிரிய – 2023’ தமிழ் – சிங்கள புத்தாண்டு போட்டி … Read more

இஸ்ரேலில் இலங்கையருக்கு செவிலியர் வேலை வாய்ப்புக்கள்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையில் 2020ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் செவிலியர் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, செவிலியர் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்த, 15 பேர் அடங்கிய 51வது குழுவிற்கு விமான டிக்கெட்டுக்கள் வழங்கும் நிகழ்வு (20.04.2023) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. இந்த குழுவில் 14 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர், … Read more