இன்று பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்

இன்று (21) பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேல், வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் சாதாரண … Read more

கடலட்டை பண்ணைகளை செழுமை படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை செழுமை படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சின் யாழ் அலுவலகத்தில் நேற்று (20) கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை சிறப்பாக செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, சாத்தியமான பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகள் … Read more

06ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கோரப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மே மாதம் 08ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் மூலமான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை … Read more

எம்பிலிப்பிட்டிய உட்பட நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு விசேட மயக்க மருந்து நிபுணர்கள்

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 08 மயக்க மருந்து நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு … Read more

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்.

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் … Read more

பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் … Read more

“வசத் சிரிய 2023” விண்ணப்பங்கள் 21 வெள்ளிக்கிழமை மதியம் 12.00 வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் அமைச்சுகள் இணைந்து ஏற்பாடு செய்யும் “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு ஷங்கிரீலா … Read more

பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக்க இடமளியேன் – ஜனாதிபதி

உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் – கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்க அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை. எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை … Read more

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக்மஹ உலேல’ புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவின் அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பிரதான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் ‘பக்மஹ உலேல’ நிகழ்வு அமைச்சின் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய … Read more

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும்….

சுற்றுலாந்து அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட அதே 15 பேர் கொண்ட இலங்கை அணியை தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கமைய இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அணி வீரர்கள்1.) திமுத் கருணாரத்ன – தலைவர்2.) குசல் மென்டிஸ்3.) ஏஞ்சலோ மேத்யூஸ்4.) தினேஷ் சந்திமல்5.) தனஞ்சய … Read more