இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” மே 05,06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகங்களில் இடம்பெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” தொடர்பில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற … Read more

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர RSP USP psc IG அவர்கள் தனது கடமைகளை நேற்று (21) பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு துணை பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் வெலகெதர அவர்கள் 33 வருடங்களுக்கும் மேலாக தாய் நாட்டிற்காக சேவையாற்றி … Read more

இலங்கை இராணுவ வீரர்களின் சேவைகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டார். இதன்போது, தாய் நாட்டிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவைகளையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு நேற்று தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி விஜயத்தின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தற்போதேனும் ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

• கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும். • இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. • தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும். • சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் – பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு! நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி … Read more

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான மிகப்பெரிய தொண்டு நிறுவனமான இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவதுஆண்டுவிழா நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1917 ஆம் ஆண்டில், சாரணர் இயக்கத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய இளம் பிரித்தானிய ஆசிரியை ஜென்னி கெல்வர்லியினால் முதலாவது மகளிர் சாரணர் குழுவை கண்டி உயர்மகளிர் பாடசாலையில் ஆரம்பித்தார். அதன்படி, நேற்று (21) இலங்கை சாரணர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டு 106 வருடங்கள் பூர்த்தியாவதைக் குறிக்கும் … Read more

கடலுணவு ஏற்றுமதி மூலமான அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பு – கடற்றொழில் அமைச்சர்

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வோர் தற்போதைய நிலையில் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கான வருமானம் தொடர்பாக, கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் … Read more

ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியற் கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகள் மார்ச் 30ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இதன்படி, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த 7500 ஆசிரியர்களையும் பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் … Read more

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று முன்தினம் (20) டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட முக்கோண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்கள் பெற்று இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை … Read more

IMFஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளார் – இச்சந்தர்ப்பத்தில் நாம் நாட்டுக்காக ஆதரவளிக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளார். எனவே, தற்போது நாம் அனைவரும் நாட்டுக்காக ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்காக … Read more

லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றி…

லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (20) தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடிப்பெடுத்தாடிய World Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது. World Giants அணி சார்பாக ஜெக் காலிஸ் 54 பந்துகளில் 78 ஓட்டங்களையும், ரொஸ் டேலர் … Read more