ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும்

ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜப்பான் முழு ஆதரவு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை … Read more

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனால் அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு … Read more

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின்  (26)  அதிகாரிகளுடன் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய;  “இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகாத ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருந்த அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் … Read more

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் வரை 39,045 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலில் நீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளதற்கும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  

புதிய வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக   திரு.நாகலிங்கம் வேதநாயகம்  இன்றைய தினம் (27.09.2024) யாழ் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் (25)  வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (2024.09.26) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் 15.09.15 ஆம் திகதி நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பல கேள்விகள் வெளிவந்துள்ளதாக தெரிவித்தார். 2024. ஒரு விவாதம் நடைபெற்றது. அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் முதற்கட்ட உள்ளக விசாரணையை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை … Read more

மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினையை உடனடியாக தீர்க்கவும் – பிரதமர் பணிப்புரை

15.09.2024 அன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் முன்னரே வெளிவந்துள்ளதாக தெரியவந்ததன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (26.09.2024) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பூர்வாங்க உள்ளக விசாரணையை நடத்தி, இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. … Read more

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

• அடுத்த வருடத்திற்கு போதுமான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். • வெளிநாட்டு உதவியில் இயங்கும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க குழு • கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு நிதி செல்லும் பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.   மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை … Read more

ஜனாதிபதியினால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நிவாரணம்

• பெரும்போகத்திற்கு ஹெக்டெயாருக்கு 25,000/- ரூபா உர மானியம் • மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை 2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு ஹெக்டெயாருக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   இதன்படி, இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படும். இந்த மானியம் ஒக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் … Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு!

இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை … Read more