18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளுக்கும் தடை

வாக்கெடுப்பிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் சனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் முடிவுறுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20)   விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை (23) வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

  அனர்த்த இடையூறுகளை முகாமை செய்வதற்காக விசேட  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

  இன்று (19) முதல் 22 ஆம் திகதி வரை விசேட தேர்தல் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவு அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.   இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலையை இக் காலகட்டத்தில் புறக்கணிக்க முடியாது என்றும் இதன் போது அனர்த்தங்களால் தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முகாமைத்துவம் செய்வதற்காக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் … Read more

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.   இன்று (19) திகதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.    இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,   கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. … Read more

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள்

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (19) அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.18 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 208 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.18ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4945 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையல் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பிலான கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18/09/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான … Read more

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க  அனுமதிக்கப்பட்டவர்கள்

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (18) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;