பாசிப்பயறுக்கான உத்தரவாத விலையை  உடனடியாக அமல்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை 

பாசிப்பயறுக்கான உத்தரவாத விலை ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணாவர்தன, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு எழுத்து மூலமான பணிப்புரையை நேற்று (13) விடுத்துள்ளார்.  உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக் குழுவினால் சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கட்டமைப்பு ஊடாக பிரதேச அபிவிருத்தி மற்றும் விவசாய குழுக்களினால்  இடைப்போகத்தில் இப்பாசிப்பயறு உற்பத்திக்கான பொருத்தமான விலையை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்த வேண்டும் . அத்துடன் விவசாயிகளிடையே பாசிப்பயறு உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

 நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   கல்வி அமைச்சில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட … Read more

2025 ஆம் ஆண்டு முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாய்…

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன சமய மற்றும் கலாசார … Read more

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம்.. 

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2025 முதல் தனிப்பட்ட … Read more

இலங்கை மஹாவலி அதிகாரசபைக்கு உரிய நீர்த்தேக்கங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம்

ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய 03 பிரதான நீர்த்தேக்கங்களை மஹாவலி அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தற்போதுள்ள நீர்மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு … Read more

காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வு

காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 387,280 அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்துடன் சுகாதார அமைச்சின் காசநோய் … Read more

109 ஆண்டுகளுக்குப் பிறகு, நியாயமற்ற விசாரணையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அரசியலமைப்பின் 33(h) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் … Read more

U20  தடகள சம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை

2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. அதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். அதேபோல், தொடரின் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது. 2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷி தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

வாகன இறக்குமதி மீதான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.   இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது … Read more

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்?

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்?வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு..  வாக்கினை ‘1’ என்றும் விருப்ப வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.  ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம். [ஃஎனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது  ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும்  குறிக்க வேண்டாம்.  ‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும்  பயன்படுத்த முடியாது … Read more