ஜனாதிபதி தேர்தல் – 2024 : வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுதல் என்ற தப்பெண்ணத்தைக் களைத்தல்

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்படுகின்றதா என்பது குறித்த கேள்வி மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளதாக சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை தெளிவுபடுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது….      

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

இன்றைய தேசிய சிறைக் கைதிகள் தினத்தை (12) முன்னிட்டு ஜனாதிபதி விசேட மன்னிப்பு…

தேசிய சிறைச்செய்திகள் தினம் தினத்திற்கு (12) சிறைக் கைதிகள் 350பேருக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 34-வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை பார்வையிடுவதற்கு வரும் உறவினர்களுக்காக இன்று விஷேட திறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார்

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 48ஆம் இலக்க … Read more

நிர்மாண இயந்திரப் பராமரிப்புக்கான தேசிய டிப்ளோமா பாடநெறி மற்றும் நிர்மாண இயந்திர தொழில்நுட்பப் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

நிர்மாண இயந்திரப் பயிற்சி நிலையத்தினூடாக நிர்மாண இயந்திரப் பராமரிப்புக்கான தேசிய டிப்ளமோ பாடநெறியும் நிர்மாண இயந்திரத் தொழில்நுட்பத்தில் தொழில்சார் சான்றிதழையும் வழங்கியது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (11) இலங்கை பொறியியல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க மற்றும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ஆர்.எச்.ருவினிஸ் தலைமையில் நிர்மாண கைத்தொழில் … Read more

இணையவழி ஆட்சேர்ப்பு காரணமாக அரசாங்கத்திற்கு 100 இலட்சம் ரூபாய் இலாபம்..

இவ்வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.. கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை … Read more

தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டி – இலங்கைக்கு கிடைத்த தங்க பதக்கங்கள்

20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் ஓடி முடித்து தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். இப்போட்டியில் பந்தயத்தை 2 நிமிடம் 12 வினாடிகள் நிறைவு செய்த இலங்கையின் சன்சலா ஹிமாஷானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சவிது அவிஷ்காவும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.இவர் போட்டியை 1 நிமிடம், 49 … Read more

இலங்கையின் நிதி நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஆசியா அபிவிருத்தி வங்கியின் கடன் உதவி பெற்றுக் கொள்வதற்கு அனுமதி

இலங்கையின் நிதி துறையின் நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உப வேலைத் திட்டங்கள் இரண்டின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு கடன் நிதி உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு  2023-09-25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.    அதன்படி 2023 டிசம்பர் மாதமளவில் 200 அமெரிக்க டாலர் கடனுதவி முதலாவது உப வேலைத் திட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டது.    அதன் இரண்டாவது உப … Read more

தபால் மூலம் வாக்களிப்பிற்கு இன்று (12) இறுதி நாள்

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி நாள் இன்று (செப்டம்பர் 12 ) ஆகும். கடந்த நான்காம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன் செப்டம்பர் ஐந்தாம் மற்றும் ஆறாம் திகதிகளில் தபால் மூல வாக்களிக்களிப்பு இடம் பெற்றது. எனினும் இந்த திகதிகளில் வாக்களிக்கத் தவறிய அரசாங்க ஊழியர்களுக்காக நேற்றும் (11) இன்றும் (12) சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்த வகையில் தபால் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் … Read more

இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் 69 69 பேருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (09) விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கி வைத்தது. இஸ்ரேல், இலங்கை அரசுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை 2,252 இளைஞர்கள் இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும் இவ் ஒப்பந்தத்தின் கீழ் 5 வருடங்களும் 5 மாத காலத்துக்கு அங்கு பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இலங்கை அரசு சார்பாக இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் … Read more