பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரி திருத்தம்

பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்..

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3223 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகைகளை அதிகரித்தல்

மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்று (09.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகைகளை அதிகரித்தல் பல்கலைக்கழக … Read more

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : 11ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள் 2024 செப்டம்பர் 11ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை முடியும் வரை நடாத்துவதற்குத் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறே பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டி, துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்றவை அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஒட்டிகளை (ஸ்ரிக்கர்) அகற்றுதல்..

2024 ஜனாதிபதித் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதனால், தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையில் தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவு காட்டும் நோக்குடன், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஒட்டிகள் (ஸ்ரிக்கர்), கொடிகள் முதலியவற்றை காட்சிப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல் என்றும், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள … Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்ச

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.08 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 178 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.08ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் 51 வீதம் முடிவுற்றுள்ளன

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 51மூ விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே பிரதி தபால் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி தபால் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சத்திற்கு அதிகமான … Read more

இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்கள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith  அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், Dan Lawrence 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 04 … Read more

செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு..

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று சனிக்கிழமை (7) மாலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட  காலமாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 ஆவது  காலாட்படையின் ஒழுங்கமைப்பில் குறித்த கிராம மக்கள் குடிநீர் பெறும் … Read more