2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு ..

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு நேரடியாகப் பார்வையிட்டது சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கம்பஹா (மினுவாங்கொட) பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டது.     சுற்றுச்சூழலுக்கு நட்பான உரங்களை இந்நாட்டின் … Read more

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 செப்டெம்பர் 06 … Read more

சுங்கத் திணைக்களம் வருமான வரலாற்றில் 1000 பில்லியன் ரூபா இலாபம்

• 2024இற்கான IMF வருவாய் இலக்கை இலங்கை எட்ட முடியும். • எந்தவொரு தரப்பினருக்கும் அடிபணியாமல் செயற்பட சுங்க அதிகார சபை அதிகாரிகளுக்கு இடமளிக்கப்பட்டதால் இந்த வாய்ப்பு கிட்டியது. • ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டல் முக்கியமானது – சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ். எந்தவொரு தரப்பிற்கும் அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட இலங்கை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரச பைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் … Read more

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதிவி நீக்கம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை … Read more

களுபோவில வைத்தியசாலையில் அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட வசதிகள்  விஸ்தரிப்பு

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட மிலேனியம் விடுதிக் கட்டடத் தொகுதி அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகள் உட்பட நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் பல மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டன.  சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீப்பாலவின் தலைமையில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்று (05) இடம் பெற்றது.    சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவின் யோசனைக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளின் பொறிமுறையை … Read more

3ஆவது டெஸ்ட் – நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவர் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய மற்றும் தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக விஷ்வ பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இதுவரை முப்பத்தாறு முறைப்பாடுகள்  பதிவு

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து இன்று (செப்டம்பர் 06)  தினம் வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்  அசையும் அசையாச் சொத்துகளின் முறைகேடான பாவனை தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் , அரச அலுவலர்கள் அரசியல் நடவடிக்கைகளில் … Read more

இரத்தமாற்றத்தின் போது  இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பதற்கு உயர் உத்தரவாதம்

  இரத்த மாற்ற செயற்பாட்டின் போது இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பதற்கு உயர்தரத்திலான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்துவதாக தேசிய இரத்த மாற்று சேவையின்  பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க   தெரிவித்தார்.                                                  உலக இரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு  நேற்றுமுன்தினம் (04) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் … Read more

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 2023 ஆம் ஆண்டின் … Read more

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

  நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது. நாம் தொடங்கிய திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்தால் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். IMF மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது- ஜனாதிபதி. துறைமுக நகரத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பான சட்டங்களை பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியது – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம. கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The … Read more