முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு இந்திய துணைத்தூதுவர் வியஜம் – அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்  சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பாக கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்   நேற்றைய தினம் (05)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்ட போதே இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் … Read more

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் நியமனத்திற்கான விண்ணப்பம் கோரல்…

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு 54 ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் அல்லது உள்ளூராட்சி நிறுவன உறுப்பினராயின் அவ்வாறானவர்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவராவதற்கான நியமனத்திற்காக தகுதி பெற முடியாது. அவ்வாறே ஆணைக்குழுவின் அங்கத்தவராக நியமனம் பெறுவதற்கு அரசாங்க சேவையின் அரசாங்க அதிகாரி ஒருவர் அல்லது நீதிமன்ற அதிகாரி அல்லது அரச … Read more

கொரிய மொழிப் பரீட்சைப் (9-1 புள்ளிமுறை பரீட்சை)  பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்  

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்கவும். 1. பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09 2. திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12 3. திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை … Read more

பரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் சமித்த துலான் கொடித்துவக்கு உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம்

2024 செப்டெம்பர் 2ம் திகதி ஆண்களுக்கான எப்44 ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்கள் புதிய உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்திய வீரர் சுமித் அன்டில் F64 பிரிவில் தங்கம் பதக்கம் வென்றதுடன் 70.59 மீட்டர் தூர சாதனையை பதிவு செய்தார். டோக்கியோ – 2020 பரா ஒலிம்பிக் போட்டியில் அவரால் நிகழ்த்திய … Read more

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் தூதரகத்தினரால் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வியட்நாம் தூதுவர் Trinh Thi Tam தலைமையில் 29 அன்று கொண்டாடப்பட்டப்பட்டது இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டார். கடற்றொழில் அமைச்சர் இலங்கை மற்றும் வியட்னாம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் பொருளாதார தொடர்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் விஷேட செய்தியை இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் … Read more

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்..

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி மதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது. இச் சிறுவர் வார்ட் அதிநவீன வசதிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை … Read more

யாழ் இந்திய துணைத்தூதுவர் – கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்களிடையில் சந்திப்பு

யாழ் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனை நேற்று 04) மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அரச உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் ஆளுமை திறன்களை விருத்திசெய்யும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பயிற்சித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை இழக்காத வகையில் தமது வாக்கினை பயன்படுத்த விடுமுறை…

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை….

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பிரதி உபவேந்தராக பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமனம் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக பல் மருத்துவ பீடத்தின் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உள்ளக தர பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.   முன்னாள்  பிரதி உபவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உபவேந்தராக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட பதவிக்காகவே பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். 1997 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் பல் மருத்துவ பட்டத்தைப் … Read more