2025 ஜனவரி 01 முதல் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

நிதி அமைச்சின் ஊடாக பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரினதும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு- ஜனாதிபதி. அனைத்து பரிந்துரைகளும் IMF உடனான உடன்படிக்கைக்கு அமைவானதாகவே உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.எந்தவித சந்தேகம் தேவையில்லை. அடிப்படைச் சம்பளம் 24% முதல் 50%-60% வரை அதிகரிக்கும். ஓய்வூதியதாரிகளுக்கு சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்-நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன. 2025 ஜனவரி 1 ஆம் … Read more

பாடசாலை மாணவர்களுக்காகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தேசிய போசாக்குக் கொள்கை…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) இன் கீழ் முன்வைத்த தேசிய போஷாக்கு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த திட்டம் அவசியம் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இதுவரை அவசியமான வகையில் தேசிய போசாக்கு கொள்கை ஒன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more

கொழும்பு மாவட்டத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன…

கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பிரசன்ன கிணிகே கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (04) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்; தற்போது கொழும்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து நான்கு மணி வரை தேர்தலுக்கு அவசியமான சகல அதிகாரிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்காக பயிற்றுவிக்கும் செயற்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் … Read more

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து … Read more

இலங்கை 'ஏ' அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியின் கீழ் இலங்கை ‘ஏ’ அணிக்கும் தென்னாபிரிக்கா ‘ஏ’ அணிக்கும் இடையிலான இரண்டாவது போட்டியில், இலங்கை ‘ஏ’ அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி 30 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தென்னாபிரிக்க ‘ஏ’ அணியால் 41.1 ஓவர்களில் 239 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. … Read more

A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிடலாம்; என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பாக 0112 784 208 – 0112 784 537 – 0112 785 922 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மழையுடனான காலநிலை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு – 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, … Read more

வட்டியல்லாத மாணவர் கடன் திட்டம்

அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் இதற்காக சில விதந்துiராகள் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02. வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல் அரசுசாரா உயர் … Read more

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்தாகத் தெரிவித்து பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து  பணம் சேகரித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மோசடி நபர்களுக்கு பணம் செலுத்திய அல்லது அவர்களால் தங்களின்  இருப்பிடம் பரிசோதனை செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுவதாகவும், அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும்  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கையெழுத்து இடப்பட்ட அவ்வறிவித்தலில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.