அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சரினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு..

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு இதுவரை அறிக்கைப்படுத்தப்படவில்லை. ஆயினும் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரைடயாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: இது தொடர்பாக 16000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அளவில் 5 வருட … Read more

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம்

விவசாயிகளின் பொருளாதார பலத்தை அதிகரித்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் விவசாயிகள் பெற்றுக் கொண்ட செலுத்தப்படாத விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதேஇந்த யோசனையை முன்வைத்துள்ளதுடன், இந்த பிரேரணை எதிர்வரும் காலங்களில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர்; தெரிவித்துள்ளார். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த … Read more

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்..

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்;டுள்ளது. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் … Read more

இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம்

மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையகச் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், இலங்கையில் அவர்களுக்கு சமநியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமை கிட்டும் எள்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவையில் … Read more

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்…

தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் நல்ல முடிவாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை – பரீட்சைகள் திணைக்களம்

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic … Read more

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (02.09.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.  இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி … Read more

அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் பற்றிய அறிவித்தல்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம் பெற உள்ள நிலையில், வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை,

புனரமைக்கப்பட்ட வவுனியா சபுமல்கஸ்கட ஸ்தூபியின் சிகரம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு

வவுனியா, சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபியின் சிகரத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) திறந்து வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார். ஜெனரல் குணரத்ன அவர்கள் வடமாகாண பிரதான சங்கநாயக்க. கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். புனரமைக்கப்பட்டசபுமல்கஸ்கட ராஜ மகா விகாரை யுத்தத்தின் போது கைவிடப்பட்டஇருந்து அதன் பின் புனரமைக்கப்பட்ட பல பண்டைய விகாரைகள் ஒன்றாகும். புனரமைப்பு பணிகள் இராணுவம் (SLA) மற்றும் … Read more