கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஓகஸ்டில் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலை மாதம் 2.4 சதவீதத்திலிருந்து 2024 ஓகஸ்ட் மாதம் 0.5 சதவீதத்திற்கு சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (30) வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

மத்தியகிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் 

மத்தியகிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றக் கட்டமைப்பும் வகிபாகமும், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற விவாதங்களின் முறைமை, பாராளுமன்றக் குழுக்களின் பணிகள் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்தல் என்பன தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விசேடமாக, தெற்காசியாவின் சூழலில் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், நிலைபேறான … Read more

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கம் – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் 21 ஆத் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்குகள் தொடர்பாக இன்று (30) தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்ப தேர்வையும் மற்றும் மூன்றாவது விருப்ப தேர்வையும் வாக்குசீட்டில் அடையாளமிட முடியும். அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக … Read more

படை அங்கத்தவர்களுக்ககான உணவு மானிய அட்டையின் பெறுமதியில் மாற்றம்..

செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதன்படி உணவு மானிய அட்டையின் நிதியை அடுத்த ஜனவரியில் இருந்து அங்கத்தவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படை அங்கத்தவர்களின் நிதி பலத்தை மேலும் நிலையானதாக மாற்றுவதுடன் நிதி ஒழுங்கு மற்றும் பொறுப்புக்களை மிகவும் வலுப்படுத்தும் வகையில் இது மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம்

லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது Gus Atkinson 74 ஓட்டங்களுடனும் Matthew Potts 20 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 8 வது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இதுவரை பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் … Read more

சீன போர்க்கப்பல்களின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஆகஸ்ட் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தீவு வந்த சீன இராணுவத்தின் HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. சீன இராணுவத்தின் போர்க்கப்பல்களின் முப்படையின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உள்ள மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் … Read more

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1500 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். அதன்போது பேருவளை, அம்பலாங்டிகொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, … Read more