இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

அடுத்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை தன்னிறைவானபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாகும் – ஜனாதிபதி. இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், … Read more

சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று, IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமானதுடன் அது வெற்றியளிக்காது!

அவ்வாறு நடைபெற்றால், டிசம்பர் முதல் ஜனவரி வரையான காலத்தில் நாடு 1.2 – 1.3 பில்லியன் டொலர்கள் வரை இழக்கும். அந்த நிதியை இழந்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். இவ்வாறான குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்ட ஒரே நாடு இலங்கை-வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி. ஜனாதிபதியின் தலைமையின் கீழ், இந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் உயர் பலனைப் பெற முடிந்தது- வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் … Read more

இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நைனாத்தீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான முதல் கட்ட நிதியை இந்தியா நேற்று (28) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன. அத்துடன் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி … Read more

கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பிற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டம்

IM Japan தொழில்நுட்ப சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் (TITP) கீழ் கட்டுமானத் துறையில் (ஆண்கள்) (Construction – Male) வேலை வாய்ப்புத் தொடர்பாக தெளிவுபடுத்தும் மற்றும் ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கான தகைமைகளை வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2024.09.06ஆம் திகதி அன்று காலை 9.00 மணிக்கு இலக்கம் 234, டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை முகவரியில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான காரியாலயத்தின் கேட்போர் கூடத்திற்கு … Read more

அநுராதபுரத்தில் ட்ரகன் பழ உற்பத்தி வெற்றி

அநுராதபுர மாவட்டத்தில் ட்ரகன் பழ உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது இந்த ட்ரகன் பழ உற்பத்தி பரவலாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. உலர் கால நிலை ட்ரகன் பழ மரங்களுக்கு ஈடுகொடுப்பதாலும், குறைந்த உழைப்புப் பயன்படுத்தப்படுதல், குறைந்த கிருமி, பூச்சிகளின் தாக்கம் மற்றும் கிருமி நாசினி, பசளை உபயோகம் போன்றவற்றுடன் சந்தையில் அதிக கேள்வி மற்றும் விரும்பத்தக்க சிறந்த விலை காணப்படும் உற்பத்தி என்பதாலும் ட்ரகன் பழங்ளின் உற்பத்தி … Read more

குழந்தைகளுக்கு வைத்திய பரிந்துரையுடன் மட்டுமே பாராசிட்டமால்

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார். சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியரின் பரிந்துரைகளில் பாராசிட்டமால் மருந்தை கொடுக்க வேண்டும் எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பாராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான … Read more

இங்கிலாந்து – இலங்கைக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி இன்று

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் … Read more

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை (27) சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

நீதிமன்ற கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு. மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்: சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு. பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றக் கட்டணமாக 50,000 ரூபாய் … Read more

இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும். இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. நண்பகல் 12.11 அளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் … Read more