ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக்கொண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்றிரவு முதல் அனைத்து இரவு நேர ரெயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று சேவையில் ஈடுபடும் ரெயில்கள் அவற்றின் அடைவிடங்களை மாத்திரம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவிப்பு

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் அசானி புயல் தற்போது நிலவுகிறது என்றும் அசானி புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு நிலையம்  தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் திகதி, புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த … Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இலங்கை தரப்புக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல் நேற்று (9) ஆரம்பமானது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இணைய வழியூடாக இடம்பெறுகின்ற இந்த கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி , நிதியமைச்சின் மற்றும் இலங்கை மத்திய … Read more

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை

கொழும்பில் இருந்து, நேற்று (09) வட்டரெக்க சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட புனர்வாழ்வளிக்கப்படுகின்ற கைதிகள் மீது, மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 கைதிகள் உட்பட பல சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சிறைச்சாலை பஸ்ஸில் இருந்த மேலும் 58 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சுமார் 30 கைதிகள், பணி வசதி திட்டத்தின் கீழ் கொள்ளுப்பிட்டி … Read more

பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் பேரே வாவி அருகிலுள்ள பாதையொன்றில் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் அவரை வாகனத்தில் இருந்து இறக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டில் இடம்பெற்ற … Read more

முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரின் கூற்றை முப்படையினர் நிராகரிப்பு

பாதுகாப்பு பிரிவினரினைக் கொண்டு பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ அவர்களால் பொது மக்களை தவறான பக்கத்தில் திசைதிருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதனை முப்படையினரால் முழுமையாக நிராகரிக்கப்படுவதோடு. பாதுகாப்பு படையினர் ஒரு போதும் பொது மக்களை தூண்டிவிடும் வகையிலான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.    

இலங்கை மக்களுக்கான அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகின்றது

இலங்கை நிலவரம் தொடர்பாக ஊடகங்களால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் 2022 மே 10 ஆம் திகதி புது டில்லியில் கீழ்வரும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். “இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் அதனுடைய (இலங்கையின்) ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்குகின்றது. அயலுறவுக்கு முதலிடம் என்ற எமது கொள்கைக்கு முக்கியத்துவமளித்து இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து அம்மக்கள் மீட்சிபெறுவதற்கு … Read more