அமைதியான முறையில் செயற்படுமாறு இராணுவத் தளபதி மக்களுக்கு அறிவுறுத்தல்

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதற்கு மதிப்பளித்து, அமைதியான முறையில் செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய … Read more

கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“Asani” அசானி என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக வலுவடைந்து மே 09ஆம் திகதி 2330 மணிக்கு வட அகலாங்கு 14.70 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.30 E இற்கும் இடையில் காங்கேசந்துறைக்கு வடகிழக்காக 670 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது வடக்கு … Read more

உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறும் இராணுவத்தினருக்கு உதவுமாறும் பாதுகாப்பு செயலாளர் & பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி தெரிவிப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நாட்டு மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக இரணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் வன்முறையை தவிர்த்து அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (9) பிற்பகல் நடைபெற்ற சுருக்கமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்கள் அமைதியை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் வன்முறை மற்றும் … Read more

நெருக்கடி நிலைக்கு தீர்வு:பாராளுமன்றத் தேர்தலே -அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு பாராளுமன்ற தேர்தல் மாத்திரமே தீர்வாகும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,தமது கட்சியின் நிலைப்பாடு இதுவாகும் என குறிப்பிட்டார். மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் அரசியலமைப்பில் திருத்தங்களையும் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தைக் கலைத்து நிலையான பாராளுமன்றமொன்றை அமைப்பதற்கு பொதுத் தேர்தல் சந்தர்ப்பமளிக்கின்றது. அரசியலமைப்பில் … Read more

பிரதமர் ராஜினாமா : விசேட வர்த்தமானி அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 47(2)(ஆ) ஆம் உறுப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் பிரதமர் பதவியில் இருந்து 2022 மே மாதம் 09 ஆந் திகதியிலிருந்து ,கேட்டு விலகியுள்ளார் என்று சனாதிபதியின் செயலாளர். காமிணீ செனரத்தினால் இந்த வர்த்மானி அறிவிப்பு நேற்று (09) … Read more