ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும்

ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஊரடங்குச்சட்டத்தை மீறுவது பொது அமைதியைப் பேணுவதற்கு தடங்கலாக கருதப்படும். இதனடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள மதுபான நிலையங்கள் ஊரடங்குச்சட்டம் முடிவுக்கு வரும் வரை மூடப்பட வேண்டுமென மதுவரி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து

அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக பொதுப் பாதுகாப்பையும், சமாதானத்தையும் பேணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து தரங்களுக்கும் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் ஓய்வு தினங்களும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளையும் தமது கடமை இடத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று, (09) இரவு 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க 2022.05.11 புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் … Read more

மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் – இயற்கை எரிவாயு குறித்த….

மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது. வலுக்தி அமைச்சு தொடர்பான 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று (05) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. … Read more

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிமையை கவனத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில், இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரையில்  பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக் ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு சற்று முன்னர் இதனை  அறிவித்துள்ளது

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களைக்கொண்ட மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் இன்று (09) அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் முடியும் வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று   கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஊடக அறிக்கை கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியாகவும் நிதானமாகவும் செயட்படுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.