பிரதமரை நீக்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை – வெகுஜன ஊடக அமைச்சர்

அனைத்து கட்சிகளின் உடன்பாட்டுடன் முன்னெடுக்கப்படும் ஒன்றிணைந்த அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு புதிய மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி விருப்பத்துடன் இருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் தற்பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ,எதிர்கட்சியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறான விடயம் தொடர்பில் … Read more

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுளில், மறு அறிவித்தல் வரும்வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கொழும்பு  காலி முகத்திடலில் இன்று (09)  இடம்பெற்ற அமைதியற்ற நிலையைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

இன்றும், நாளையும் கம்பஹா- கொழும்பு மாவட்டங்களுக்கு 15,000 எரிவாயு சிலிண்டர்கள்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்றும் நாளையும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கையில், எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த சமையல் எரிவாயு உடனான கப்பலை நாளைய தினம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்

பிரதமரை தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி சிலர் இன்று (09) அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலரிமாளிகைக்கு அப்பாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலும பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில தரப்பினர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில் பிரதமர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினால் நாடு தொடர்ந்தும் … Read more

40,000 மெற்றிக் தொன் பெட்ரோல், மசகு எண்ணெய் அடங்கிய கப்பலகள் 

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் மசகு எண்ணெய் அடங்கிய மேலுமொரு கப்பலும் இன்று நாட்டை வந்தடைய உள்ளன. அவற்றில் அடங்கியுள்ள எரிபொருள் ,இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்க கூடியதாக இருக்கும் என்று   அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“Asani” அசானி சூறாவளி

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“Asani” அசானி என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக வலுவடைந்து மே 08ஆம் திகதி 2330 மணிக்கு வட அகலாங்கு 13.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.50 … Read more

இலங்கை அணி – பங்களாதேஷ் பயணமானது

இலங்;கை அணி – பங்களாதேஷ் பயணமானது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டி 11-12ம் திகதிகளில் இடம்பெறும். டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது

பிரதமர் இன்று அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசி பெற்றார். இதன் பின்னர் விஹாராதிபதி நுவர கலாவியோவின் தலைமை சங்க நாயக்கர் சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து அவரது சேமநலன்களைக் கேட்டறிந்தார். இதன் பின்னர் றுவன்வெலி சாயவில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாளை ரயில், பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்

ரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதில் சேவையில் ஈடுபடுகின்ற எந்தவொரு ஊழியரும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடமாட்டார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்