News LK
சமர்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் பற்றி அவதானம் செலுத்தப்படும்…
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது. … Read more
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் நடைமுறைப்படுத்தல் விபரங்கள்
இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் சக்திப் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2022 மார்ச் 17ஆம் திகதி இந்திய ஸ்டேட் வங்கி ஊடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த கடனுதவித் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுடன் அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப்பொருட்கள் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முன்னுரிமை அடிப்படையில் சீனி, பால்மா, கோதுமை, மருந்து, எரிபொருள் மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் … Read more
இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக , பயனாளர்களை தொலைப்பேசியில் தொடர்புகொள்ளும் தமிழக அதிகாரிகள்
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தாதவர்கள் 1.48 கோடி பேர் இருப்பதாக கணக்கிடப்பட்ட்டுள்ளது. இவர்களின் பெயர் பட்டியலையைக்கொண்டு அவர்களது தொலைபேசி எண்களில் நேரடியாக தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் பொது தளத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியானது. இதில் தடுப்பூசி செலுத்தாத நபர்களின் பெயர், முழு முகவரி, செல்போன் எண், முதல் தடுப்பூசி எந்த மையத்தில் எப்போது செலுத்திக் கொண்டனர் … Read more
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப்புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்குப்புறம்பானது என்றும் அமைச்சர் தனது டுவிட்டர்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமோ அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் … Read more
அந்தமான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும்
வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறதுஇது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது இன்று (08) காலை புயலாக … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் (08.05.2022)
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் (08.05.2022)
அவசரகால நிலை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும். இருந்த போதிலும், விஷேடமாக நேற்றும் கடந்த சில நாட்களாகவும் அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டத்தை மாற்றி மக்களின் ஜனநாயக உரிமைகள் … Read more
மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்பு
மியன்மாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார 2022 மே 02 ஆந் திகதி யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றவுடன் தூதுவராலய ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர், இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான தேரவாத பௌத்தத்தின் அடிப்படையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். பரஸ்பர நன்மைக்காக இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார தொடர்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தூதுவர் ஜனக … Read more
தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர்
தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 16, 18, 20 மற்றும் 23 வயது பிரிவுகளில், நான்கு கட்டங்களின் கீழ் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை தடகள போட்டிகளில் அதிகளவிலான வீர வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என நம்புவதாக இலங்கை தடகள போட்டி சம்மேளனம் தெரிவித்துள்ளது.