2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் … Read more

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் பொதுவான சேவைகள்

இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்ணககள் நாளை மறுதினம் (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு நாள் சேவை தவிர்ந்த பொதுவான சேவைகளே இவ்வாறு இடம்பெறவுள்ளன. இதுதொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:    

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமை, மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கே

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமைஇ மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கேயாகும் என்று என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: நேற்று (மே 06) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்கான காரணம், சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்குதடையின்றி … Read more

எரிபொருள் தர பரிசோதனை குறித்து, எரிசக்தி – மின்சக்தி அமைச்சு விளக்கம் – காலி எரிபொருள் சம்பவம் குறித்தும் விசாரணைகள்

எரிபொருள் இறக்குமதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது முதல், அதன் விநியோகம் வரையில் நான்கு கட்டங்களில் அதன் தரம்  பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகிப்படுவதாக  எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் தரம் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சு அறிவித்துள்ளது. காலி எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக தாங்கியில் நிரம்பியிருந்த நிலத்திற்கு கீழ் நீர் அகற்றப்படாது ,எரிபொருள் … Read more

மாலி அமைதிகாப்பு பணிகளுக்கான 4வது படைக்குழுவினர்

இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிவப்புகம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இராணுவத்தின் 12 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் மே மாத இரண்டாம் வாரத்தில் … Read more

வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் அமைந்துள்ளது மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர். தீ சம்பவம் பற்றிய தகவலைப் பெற்றதைத் தொடர்ந்து, கடற்படை தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து குடியிருப்பாளர்களின் உதவியுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அதை  மேலும் பரவாமல் தடுத்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைப்பதற்காக கடற்படை  முகாம் கெமுனுவில் இணைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் … Read more

2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சை நாடகம், கலை நடைமுறைப் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சையில் நாடகம் மற்றும் கலைக்கான (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகள் , நாளை (07) தமக்கான பரீட்சை மண்டபத்திற்கு சென்று செயல் முறை பரீட்சைக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இன்று(06) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பரீட்சை; ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை குறிப்பிட்டுள்ளார்..

விசேட வர்தமானி அறிவிப்பு

இன்று (06)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ,அவசரகால சட்ட நிலை  பிரகடனத்திற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ,அவசர காலச் சட்ட நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக விசேட வர்த்மானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, http://documents.gov.lk/files/egz/2022/5/2278-22_T.pdf