பாலமுனை சம்பவம்:ஆராய்வதற்கென பொலிஸ் குழு

அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை பிரதேசவாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பவம் பற்றி விசாரிக்கவென விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்துவதற்கு பொலிசார் முயன்ற போது அவர் பொலிசாரின் உத்தரவையும் மீறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது அவர் சறுக்கி விழுந்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற கும்பலொன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது. … Read more

பொலிஸாரின் அறிவிப்பு

நாட்டில் பல்வேறு குழுக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். ஜனநாயக முறையில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. எனினும் குழப்பம் விளைக்கும் வகையில் செயறப்படுதல், பொது மக்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அதன்படி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமனம்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று, (06) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் முதல் தரப் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.எச் பீரிஸ் அவர்கள், 1965இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியல்  துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது முதல் நியமனத்தைப்பெற்ற அவர், 44 வருடங்களாக பல்கலைக்கழக … Read more

வடமாகாண கிராமப்புற பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று

வடமாகாணத்தில் இன்றைய தினம் கிராமப்புற பாடசாலைகள் வழமை போன்று நடைபெறுவதாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இன்று எமது செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, இன்றைய தினம் பஸ் சேவை இடம்பெறாமை மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காமையினால் பாடசாலை கல்வி செயற்பாடுகள் இடம்பெறவில்லை. Logini Sakayaraja

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்…

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற) அவர்கள், முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதி அவர்களுக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதி அவர்களுக்கு தேசிய … Read more

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட அறிக்கையொன்றை  சபாநாயகர் வெளியிட்டார்.  

ஐ.பி.எல் கிரிக்கெட் – டெல்லி அணி அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (05) நடைபெற்ற போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரில் நேற்று (05) மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. இதனால், முதலில் துடுப்பாட்டத்தை செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 … Read more

எதிர்வரும் திங்கட்கிழமை நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

கொவிட் 19 வைரசு தொற்றுக்கெதிராக வழங்கப்படும் நோய்த்தடுப்பு தடுப்பூசியின், நான்காவது டோஸை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்தார். இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார். 20 – 60 வயதிற்கு … Read more