ஓட்டமாவடி முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களுக்கு வரவேற்பு

கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக இவ்வருட கல்வியாண்டிற்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப்பிரிவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.நளீம் ஸலாமி தலைமையில்  05.05.2022ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிதிகளாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைட் (நளீமி), முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.காதர் ஆசிரியர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற அதிபர்களான … Read more

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்  உண்மைக்குப் புறம்பானது…

2022.05.03ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஜனாதிபதி அலுவலகம் அரச நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறு அறிவிப்பு விடுக்கவில்லை என்பதுடன், இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 06.05.2022  

சில இடங்களில் 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மே 06ஆம் திகதி காலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில் 50 மி.மீ க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம் பெறக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை … Read more

தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இது குறித்து சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி … Read more

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, மொங்கோலியா ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதம் கையளிப்பு

மொங்கோலியாவுக்கான தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதுவர் கலாநிதி. பாலித கோஹோனா, 2022 ஏப்ரல் 27ஆந் திகதி மொங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னாவிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்தார். நற்சான்றிதழ் வழங்கும் விழா அரச இல்லத்தில் நடைபெற்றதுடன், தூதுவர் கலாநிதி பாலித கொஹொனா அரச மரியாதை அணிவகுப்பை அங்கு பார்வையிட்ட அதே வேளையில், ஜனாதிபதி குரேல்சுக் உக்னாவுடன் சந்திப்பொன்றிலும் ஈடுபட்டார். இந்த சந்திப்பில், தூதுவர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்பான வாழ்த்துக்களை மங்கோலிய ஜனாதிபதிக்குத் … Read more

உலக அளவில் கொரோனா:இதுவரை 62 லட்சத்து 71 ஆயிரத்து 889 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.57 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 57 லட்சத்து 92 ஆயிரத்து … Read more

பாராளுமன்றத்தில் இன்றும் ,சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மீதான விவாதம்

பாராளுமன்றம் மீண்டும் ,இன்று (06) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. வழமையான அலுவல்களையடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் நிதியமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (06)  இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் … Read more

முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை மேலும் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (05) இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இவரை கடந்த இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்திருந்தது. இருப்பினும் அன்றைய தினம் பொது … Read more