இலங்கையில், இன்று அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
இலங்கையில், இன்று (01) அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 01
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில், இன்று (01) அறிக்கையிடப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 01
மலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர் தின நிகழ்வுகளில் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வு,கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் இன்று (01) நடைபெற்றது.இதன்போது திரு. அண்ணாமலை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிரிவுகளின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் ஆகியோர் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் 2022 ஏப்ரல் 29ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், கொழும்புக்கும் கன்பராவுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளின் முழுமையான வரம்பு மற்றும் … Read more
நாடு முழுவதும் இன்றும் நாளை மறுதினமும், மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை … Read more
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் … Read more
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் 9 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் தலைவர் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். துடுப்பாட்த் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த நிலையில் 2022 IPL போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.33 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. .கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 33 லட்சத்து 12 … Read more
இந்தியாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,324 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,79,188ஆக உயர்ந்தது. * புதிதாக 40 பேர் … Read more
வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 4ஆம் திகதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்த்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிலையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 01.05.2022