தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்

தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதற்காக மாகாண சபை, பிரதேச சபை மூலம் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க கூறினார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக  மேலும் தெரிவிக்கையில், நாடு இன்று எதிர் நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதனை ஊக்குப்படுத்தும் வகையில் அரச அதிகாரிகள் … Read more

பணவீக்கம் 2022 ஏப்ரலில் தொடர்ச்சியாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் … Read more

4 ஆயிரத்து 643 ஆசிரியர் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்

2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்  கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.  2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு … Read more

அடுத்த மாத இறுதிக்குள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாவ்ப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக கூறியுள்ளது. இந்திய அரசின் தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாவ்ப் எரிவாயு தொடர்பாக சந்தையில் உள்ள நிலைவரத்திற்கு … Read more

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி கேரருகிறார்- தமிழக முதல்வர்

தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதி வழங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி ,பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று … Read more

ரம்புக்கணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

ரம்புக்கணை சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவு பிறப்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்னவை அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவு பிறப்பித்தார். சந்தேக நபர் கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அவருடன் மேலும் 3 கான்ஸ்டபிள்களையும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. இதன்படி 3 கான்ஸ்டபிள்களும் அடுத்த மாதம் … Read more

சர்வகட்சி அரசாங்கத்திற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஆரம்பம்…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று, (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், … Read more

IMF நிதியத்துடன் 2 மாதங்களில் ஆரம்ப உடன்படிக்கை

IMF நிதியத்துடன் எதிர்வரும் 2 மாதங்களில் ஆரம்ப உடன்பாL ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை வர்த்தக சபை கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொள்கை மாற்றத்துக்கு மத்தியில் நிதியின் மூலம் சிறப்பான எதிபார்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். இலங்கை கடந்த 12 ஆம் திகதி வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் … Read more