இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு சந்தை நடவடிக்கைகள்

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு கொள்வனவாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நேற்று (27) புது உத்வேகத்துடன் நிறைவடைந்தது. எஸ் & பி.எஸ்.எல் 20 இன் பங்கு சுட்டெண் 3.5 வீதமாக உயர்வடைந்ததுடன் பெஞ்ச் மார்க்கின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 5 வீதத்தை விட அதிகரித்தது. 14.4 மில்லியன் பங்குகள் 2.18 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி:இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைத்துக் கொள்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க மற்றும் kapital crop international pvt ltd, orb touch cc pvt ltd ஆகிய நிறுவனங்களின் … Read more

அபேக்ஷா வைத்தியசாலையில் வழமையான மரண வீதங்களே

வழமைக்கு மாறாக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அபேக்ஷா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையாகும். இதனை உணர்வுபூர்வமாக பயன்படுத்தி, சிலர் நிதி திரட்டல் போன்ற முறைகேடுகளிலும் ஈடுபடலாம் . மருந்து வகைகள் இன்றி, அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சிறுவர்கள் உயிரிழப்பதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வழமையாக இடம்பெறும் மரண … Read more

'கொவிட் பரவுவதில் நாம் 'பார்வையற்றவர்களாக' இருக்கிறோம் ' WHO' தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு ,உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் ,உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளார். தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை குறைந்துள்ளதிளால் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதில் உலகம் ‘பார்வையற்றவர்கள் ‘ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர மாநாட்டில்  செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், ‘உலகளவில் பல நாடுகள் கொரோனா பரிசோதனை செய்வதை குறைத்திருப்பதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்று பற்றிய … Read more

2021 (2022) க.பொ.த உயர்தர செய்முறை பரீட்சை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் ஆகிய பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதுடன், அது தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:  

HIV வீட்டிலேயே பரிசோதனை செய்வதற்கான வசதி

HIV நோய் தொடர்பான பரிசோதனைகள் தற்போது  நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைக்காக இணையத்தளத்தின் மூலம் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்று தேசிய பாலியல் நோய் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணயகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் HIV யினால் பாதிக்பப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் புதிதாக அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது … Read more

போக்குவரத்து சேவைக்கு பாதுகாப்பு

அரச சேவை ஊழியர் சங்கங்கள் பல இன்று ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில், ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைவதில்லை என்றும் , தனியார் பஸ் சேவை ஊழியர்களும் பங்குகொள்வதில்லை எனவும்  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக பொது பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு இந்த பிரதிநிதிகள் உடன்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதேபோன்று இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பொது போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான … Read more

திணைக்களங்கள் பலவற்றில் ஒரு நாள் சேவைக்கு பாதிப்பு இல்லை

இன்று (28) பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற போதிலும் திணைக்களங்கள் பலவற்றின் ஒரு நாள் சேவைக்கு தடை ஏற்படாது என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் ஒரு நாள் சேவை இடம்பெறும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு Leprosy நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் . ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 50 நோயாளிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆரையம்பதி,ஏறாவூர்,செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகமான நோயாளிகள் இனங்காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் (28) இடம்பெற்றது. தேசிய … Read more