பிரதமர் பதவி விலகக் கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். கௌரவ பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர். மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும் மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் … Read more

றம்புக்கனை சம்பவம்: தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிவான் உத்தரவு

றம்புக்கனை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு கேகாலை நீதவான் திருமதி வாசனா நவரட்ன உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்த மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவர் அறிவித்துள்ளார். றம்புக்கனை ரயில் நிலையத்திற்கு அருகில் பாதையை இடைமறித்து, கடந்த 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் … Read more

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி

இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுக்குழுவின் தலைவர் திரு. லூக்காஸ் பெட்ரிடிஸ் அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஏப்ரல் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பங்களிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார். மோதல் சூழ்நிலையின் போது கடந்த காலத்தில் ஆற்றிய முக்கிய பங்கு மற்றும் மோதலுக்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு உதவுவதில் அதன் … Read more

இன்றைய (27) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் முறையாகத் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டும்

அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய் (1,496,155,864) ஈட்டியிருந்தாலும், 100 மில்லியன் ரூபாய் மாத்திரமே அரச திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு விசேட கவனம் செலுத்தியது. இதன்போது கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், அரச நிறுவனங்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை … Read more

டைரோலில் இலங்கையின் புதிய துணைத் தூதுவர் நியமனம்

அவுஸ்திரியாவின் டைரோல் நிர்வாகப் பகுதியில் இலங்கையின் புதிய துணைத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமனம் செய்யும் கடிதத்தை தூதுவர் மஜிந்த ஜயசிங்க நியமன கையளித்தார். கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பன் இன்ஸ்ப்ரூக் மற்றும் போலோக்னா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநிதி ஸ்டெப்பன் போலோக்னா, பிராங்பேர்ட், இன்ஸ்ப்ரூக், பாவியா மற்றும் ட்ரையண்ட் பல்கலைக்கழகங்களில் உள்ள சர்வதேச பட்டதாரிப் பாடசாலையின் அறிஞராவார். தற்போது, இலங்கையில் வணிக அபிவிருத்தி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் டிமட் – ஈ.எல். மெடிக்கல் … Read more

4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவம்

நான்காவது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாடு பல ஆசிய-பசிபிக் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஏப்ரல் 23ஆந் திகதி ஜப்பானின் குமாமோட்டோ நகரில் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘நிலையான வளர்ச்சிக்கான நீர்: சிறந்த நடைமுறைகள் மற்றும் அடுத்த தலைமுறை’ ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உச்சிமாநாட்டின் அரச தலைவர்களுடன் உரையாற்றியதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் சுத்தமான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் … Read more

தமிழகத்தில் சித்திரை சதய விழாவில், தேரில் தீ: 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை சதய விழாவில் தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரிந்ததினால் 11 பேர் இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தமிழகத்தில் தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறுவது வழமை. அதன்படி இந்த ஆண்டு 94 ஆம் ஆண்டுக்கான சித்திரை … Read more