நெடுஞ்சாலைகள் அமைச்சர் ,எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடல்

நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.  2022.04.27 நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அது தொடர்பான சேவைப் பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பு புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள … Read more

இலங்கையில் இதுவரையில் 6, 63 , 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் நேற்று (25) 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) 898 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் மற்றும் 665 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் மேற்கொண்டதில் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி ஜனவரி 1 முதல் இதுவரையில் மொத்தமாக 75 ஆயிரத்து … Read more

அரச நிறுவகங்களின் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுற்றுநிரூபம்

பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கோடு நிதியமைச்சு புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது. அரச சேவைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்கள், அரச அமைச்சுக்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இதுதொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்றை நேற்று (26) விடுத்துள்ளார். அரச நிதியை பொறுப்பாகவும், முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டுமென்று இந்த சுற்றுநிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களின் போது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. … Read more

சமையல் எரிவாயு விலை மறுசீரமைப்பு

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,675 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,945 ரூபாவாகும். 2.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக … Read more

இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புகள் பெல்ஜியத்தில் ஊக்குவிப்பு

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஏப்ரல் 21ஆந் திகதி பெல்ஜியத்திற்கு இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக ‘தேங்காய் அதிசயம் – உண்மையிலேயே இலங்கை’ என்ற தலைப்பில் ஒரு பட்டறையை நடாத்தியது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவை இலங்கையில் உள்ள தேங்காய் உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களின் பங்கேற்பை மெய்நிகர் தளத்தில் ஒருங்கிணைத்தன. சைவம், சைவ உணவு மற்றும் ஆசிய … Read more

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். கௌரவ பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய … Read more

உலக வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்கள் நிதியுதவி… தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்…  

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார். … Read more

மலையகத்தின் முதலாவது பேராசிரியை திருமதி ராஜலட்சுமி சேனாதிராஜா

மலையகத்தின் முதலாவது பேராசிரியை என்ற கௌரவம் திருமதி அன்னலட்சுமி சேனாதிராஜாவிற்கு கிடைத்துள்ளது. அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பேராசிரியர் என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது. மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னதாக, கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாக கடமையாற்றிய பெருமை ராஜலட்சுமி சேனாதிராஜா அம்மையாருக்கு உள்ளது. இவர் பல தடவைகள் பதில் உபவேந்தராகவும் கடமையாற்றியவர். பேராசிரியை ராஜலட்சுமி பல நூல்களை எழுதியவர். தேசிய கல்வி நிறுவகத்திலும் பணியாற்றி … Read more