பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 22.04.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 22.04.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 22.04.2022
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாகஹம்பாந்தோட்டை … Read more
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு நேற்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் அவர்கள் … Read more
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும்போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.; அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் … Read more
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா … Read more
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று முன்தினம்(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். நெருக்கடியை உருவாக்குவதற்கு … Read more
புதிய கொழும்புத் திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் கல்வியைத் தொடரும் கொழும்புத் திட்ட அறிஞர்களை வரவேற்கும் நிகழ்வு 2022 ஏப்ரல் 14ஆந் திகதி கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் சுமார் 10,000 இளங்கலைப் பட்டதாரிகளை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 40 நாடுகளில் கல்வி கற்கவும், பயிற்சிகளைப் பெறவும் புதிய கொழும்பு திட்ட நிகழ்ச்சித்திட்டம் சந்தரப்பம் வழங்குகின்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர், ஆய்வுத் திட்டத்திற்கு இலங்கையை தெரிவு செய்தமைக்காக கொழும்புத் திட்ட … Read more
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 21ஆந் திகதியாகிய இன்றைய தினம் சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளைப் பாராட்டினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட சீன நினைவுச் சின்னங்களையும் நினைவு கூர்ந்தார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை … Read more
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை … Read more
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தடைசெய்யப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை முகாமையாளர் எஸ்.பிரசாந்த் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான ரீ.சஞ்சீவன், கே.தர்மேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளித்தனர். செயலமர்வில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 100 பேர் … Read more