இன்றைய மின் துண்டிப்பு நேரம்

நாடளாவிய ரீதியில் இன்றும் (20) 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்; மின் துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முக்கிய வலயங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் அனைத்து வலயங்களிலும் (A, B, C, D, E, F, G, H, I, J, K, L,P, Q, R, S, T, U, V … Read more

எரிபொருள் பவுசர் தீயிடப்படுவதை தடுப்பதற்காக குறைந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டது – பொலிஸ் மா அதிபர்

றம்புக்கணை ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் 30,000 லீற்றர் எரிபொருளுடனான பவுசர் ஒன்றை தீயிடுவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சியை தடுப்பதற்கும் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தை தடுப்பதற்கும் பொலிசார் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். றம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று இந்த விடயங்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை ,றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தங்களது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு … Read more

றம்புக்கணை சம்பவம் – பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

றம்புக்கணையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (20) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார். இதன்போது றம்புக்கணை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் சார்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு  ஏற்படுத்தினார்கள். எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இதன்போது  அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் சபையில் கூச்சல் நிலை ஏற்பட்டது.இதனால் சபை நடவடிக்கைகள் 10 … Read more

றம்புக்கணை பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு நீடிப்பு

றம்புக்கணை பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஈடுபட்டோரை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது ஒருவர் உயரிழந்ததுடன் 13 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான 15 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி மஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அமைதி நிலையை நிலைநாட்டுவதற்காக மீண்டும் அறிவிக்கும் வரையில் றம்புக்கணை பொலிஸ் எல்லைப் … Read more

பொது மக்களுக்கு பொலிசார் விசேட வேண்டுகோள்

எரிபொருளை எடுத்துச்செல்லும் பவுசர்களுக்கு இடையூறு செய்வதை அல்லது அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எரிபொருளை எடுத்து செல்லும் பவுசர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்  எனவும் … Read more

மருந்துத் தட்டுப்பாட்டினால் எவரும் உயிரிழக்கவில்லை –  சுகாதார அமைச்சர் 

மருந்துத் தட்டுப்பாட்டினால் இதுவரை எந்தவொரு மரணமும் இடம்பெறவில்லை; என்று  சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (19)  இடம்பெற்ற மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளும் விளையாட்டின் போது ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர்  ,நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும், செஞ்சிலுவைச் சங்கமும் இலங்கைக்கு உதவுகின்றன. இந்தியாவின் கடனுதவியின் கீழ் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்யவும் … Read more

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ,விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான ஒழுங்குவிதிகளுக்கு சபையில்  அனுமதி

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.12.24ஆம் திகதிய 2259/54ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயட் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2022.01.18 ஆம் திகதிய 2263/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன இன்று (19) பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை இந்த இணைப்புக்களில் பார்வையிடவும் http://documents.gov.lk/files/egz/2021/12/2259-54_T.pdf http://documents.gov.lk/files/egz/2022/1/2263-02_T.pdf பாராளுமன்றம் இன்று மு.ப 10 மணிக்கு கௌரவ சபாநாயகர் … Read more

கௌரவ பிரதமர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

கௌரவ பிரதமர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால் இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் … Read more