தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனம்

தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 443 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள், வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடங்களும், மின்; கம்பங்களும் சேதமடைந்துள்ளன. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி அனர்த்த அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலை குறித்து பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை

நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக இஸ்திர நிலையை ஏற்படுத்துவதன் ஆரம்ப நடவடிக்கையாக 19 ஆவது அரசியல் யாப்பு சட்ட திருத்தத்தின் தேவையை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இதன்போது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் உரையாற்றினார். 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும் என்றும் பிரதமர் … Read more

நிதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை

நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்த்தன இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை நிதி அமைச்சர் தலைமையிலான இந்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று ஆரம்பித்த பேச்சுவார்த்தை சாதகமான முறையில் இடம்பெற்றிருப்பதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வொpங்டனில் … Read more

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் இன்று இடம்பெறும். முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இதுவரை நிறைவு பெறாத பாடசாலைகளில் மாத்திரம் தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடையலாம் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை நேற்று ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது..

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது பாராளுமன்றம் 22ஆம் திகதி வரை நடைபெறற பாராளுமன்ஃற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வு இன்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறித்து சட்டத்தரணிகள் கௌரவ பிரதமருக்கு விளக்கம்

அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியை நீக்குவதானது ஆர்;ப்பாட்டக்காரர்கள் கூறுவது போன்று செய்வதற்கு முடியாததொரு விடயமாகும் என்றும் அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல் இன்றி, தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக … Read more

இராஜாங்க அமைச்சர்கள் 24 பேர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்.

மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 24 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டு;ளளார். உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி ரோஹண திஸாநாயக்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆவார். நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை,  வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆவார். நீர்வழங்கல் … Read more

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை.(2022-04-18)

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை.(2022-04-18) இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற … Read more