சிறுபோக பயிர்ச்செய்கைக்கு இரசாயன உரம்

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தேவையான இரசாயன உரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனியார் துறை இறக்குமதியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இது பற்றிய முதல்கட்டப் பேச்சுவார்த்தை இன்று விவசாய அமைச்சில் நடைபெறும். விவசாய உர இறக்குமதிக்காக வழங்கப்படவிருக்கும் நிவாரணம் பற்றி இந்தப் பேச்சுவார்;த்தையின் போது கவனம் செலுத்தப்படும். இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் நிவாரண விலையில் உரத்தை வழங்க முடியும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் விளக்கமளிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் 2022 ஏப்ரல் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அறிவித்தனர். அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. … Read more

2022 பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம் – நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது இடைநிறுத்தம்

2022 பாடசாலை முதலாம் தவணை, நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டில் ,தற்போது நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் கூறினார் . இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மீண்டும் கவனத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2022ம் ஆண்டு அரசபாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை

2022ம் ஆண்டுக்காக அரசபாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் தொடக்கம் இடம்பெறவுள்ளது. மேன்முறையீட்டுப் பட்டியல் தொடர்பில் பிரச்சினை உள்ள பாடசாலைகளில்மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம்

தற்போது நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம் தெரிவித்தார். நாடு ஸ்திரநிலையில் இல்லாவிட்டால் பொருளாதார சவால்களை வெற்றி கொள்வது கடினம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்நேரத்தில் கட்சி அரசியல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தாது, நாடு என்ற எண்ணத்தை வளர்த்து நாட்டை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டொலர் இருப்பை மேம்படுத்துவதே முதலில் செய்ய வேண்டிய காரியமாகும். … Read more

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது. இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சரருமான ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். தாம் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதாக வெளியான கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். சமகால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரையில், எதுவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லையென ஆளுங்கட்சிக்கு தாம் அறிவித்துள்ளதாக அவர் ட்விற்றர் பதிவில் கூறியுள்ளார். … Read more

“இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான ஒரு வழிகாட்டல்” – இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள் ,உட்கட்டமைப்பு தொடர்பான நூல்

இலங்கையின் கொடுப்பனவுத் தொழிற்துறைக்கு புதிய கொடுப்பனவுச் சாதனங்கள், முறைகள் மற்றும் செயன்முறைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக இத்தொழிற்துறை தற்பொழுது விரைவாக மாற்றங்களுக்கு உட்பட்டுவருகிறது. பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து இப்புதிய இக்கொடுப்பனவுச் செயன்முறைகள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு புதிய வரைவிலக்கணம் தருவதுடன் வியாபாரங்களும் வாடிக்கையாளர்களும் அவர்களது நிதியியல் கொடுக்கல்வாங்கல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதனையும் இயலுமைப்படுத்தும். இப்பின்னணியில், பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக கொடுப்பனவுப் பணிகள் தொடர்பாக உள்ளூர் வெளியீட்டின் அவசியத்தினை இனங்கண்டு இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள்/முறைகள் … Read more

மகிழ்ச்சியான , ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன்- ஜனாதிபதி

அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டுள்ளார் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்துக் கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு … Read more

தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று, (16) முற்பகல் தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதன் முதற் கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் … Read more