தென் ஆப்பிரிக்காவில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம்இ நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. வீதிகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில்இ டர்பனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் … Read more

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை வரையறுத்துள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் ,முச்சக்கரவண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கும் மாத்திரமே ஒரு தடவையில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப முடியும். அத்துடன் கார், ஜீப் வண்டிகளுக்கு ஐயாயிரம் ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) பி.ப. 1.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனினும் பஸ்கள், பாரவூர்த்திகள் … Read more

சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

பண்டிகைக் காலப்பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. சட்டத்தை மதித்தல் , வாகனங்களை செலுத்தும் போது வேக கட்டுப்படு , ஆத்திரப்படாமல் இருத்தல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்தல் முதலானவற்றை கவனத்திற்கொள்வதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி பயிற்சி பிரிவு தாதி அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார். தமிழ் … Read more

கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி சிறந்தது

தற்போது எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு உணவு வகைகள் அதிகளவில் உணவில் சேர்க்கப்படுவதால், நாம் உண்ணும் மற்ற உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எண்ணெய் உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி செய்வது சிறந்தது என போஷாக்கு மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாழ்க்கையில் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மத்தியில், சரியான போஷாக்கு மிகுந்து உணவுவகைகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தொடர்பில் பொது … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் … Read more

இலங்கைக்கு மேலும் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு

இலங்கைக்கு விரைவில் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருப்பதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக வங்கியின் உதவியோடு காஸை இறக்குமதி செய்வதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவிருக்கின்றன. இதற்கமைய இலங்கையில் காஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தில், இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் அடங்கலாக இதுவரை … Read more

சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் திரும்ப விசேட போக்குவரத்து வசதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச்சென்ற மக்கள் ,மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (15) முதல் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார். மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு வருவதற்கான தேவையான பஸ் சேவைகளை இன்று தொடக்கம் மேற்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விடுக்கும் செய்தி

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல … Read more