புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ,கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் 17 ஆம் … Read more

இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி

இந்திய உதவி திட்டத்தின் கீழ் ,இலங்கைக்கு வழங்கப்பட்ட 11,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை, கொழும்பு துறைமுகத்தில்வைத்து இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளால் ,இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. Supply of 11,000 MT of rice to Sri Lanka           A consignment of 11,000 MT rice, which arrived in Sri Lanka today under the concessional Indian Credit Facility of USD … Read more

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு கௌரவ பிரதமரினால் ,பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனம் வழங்கிவைப்பு

புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு, நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வௌ பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு நேற்று (11) அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி … Read more

இன்று முதல் 14 ஆம் திகதி வரையில் பீப்பாய்கள், கான்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் 14 ஆம் திகதி வரையில், பீப்பாக்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் அனுமதியுடன் வழங்கப்படும். எரிபொருள் இன்றி பயணத்தை தொடர முடியாமல் இடைநடுவில் நிற்கும் வாகனங்களுக்காக கான்களில் எரிபொருள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ,இவ்வாறான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடை முறை ஏற்கனவே நடைமுறையில் … Read more

பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட விஷேட அறிக்கை

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார். தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் … Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு…

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார அவர்கள், சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் நேற்று, (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். … Read more