நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும். கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் … Read more

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான சேவை நீடிப்பு 2021ஆம் டிசம்பர் மாதம் 31 முதல் அமுலுக்கு வந்தது. வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு அனர்த்த பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கையை பின்பற்றுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த தெரிவித்துள்ளார். மருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்படி வர்த்தமானி மூலம் விலை கட்டுப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகளை மாத்திரம் திருத்தியமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டொலரின் விலை … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு

அணிசேரா இயக்கத்தில் உள்ள நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 07 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பதில்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவர்களிடம் விளக்கினார். இதில் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திலான சீர்திருத்தம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கான தயார் … Read more

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுகின்றது. எனவே தற்போது நிலவும்மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், … Read more