மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் திரட்டல்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரனின் ஆலோசனைக்கு அமைவாக விளையாட்டு வீர, வீராங்கனைகளின் விபரங்கள் கீழ் வரும் பிரிவுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நோக்கில கோரப்படுகின்றது. 1. 1990ம் ஆண்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் (Under Ministry) அனுமதியுடன் பங்கு பற்றிய போட்டிகள் அல்லது இலங்கை தேசிய … Read more

மட்டக்களப்பில் எரிபொருளை சீரான முறையில் வழங்குவதற்கு 6 தீர்மானங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை சீரான முறையில் வழங்குவதற்கு 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுதல் ,அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பபட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை கண்காணித்தல் தொடர்பாக மட்டக்களப்பு … Read more

கடற்பகுதி: அவ்வப்போது பலமான காற்று ,கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில்உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் … Read more

மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கடும் மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு, பாறைகள் புரளுதல் முதலான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதனால் பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயல்படமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 8 … Read more

அனைத்து மதுபானசாலைகளும் 13 , 14ஆம் திகதிகளில் மூடப்படும்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 IPL சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில்

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சுற்றுத்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில,; கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. 6 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாமிடத்திலும் 6 புள்ளிகளுடன் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது. லக்னவ் சுப்பர் ஜெயன்ஸ்ட் அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திலும் டெல்லி கெப்பிட்டல் … Read more

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு நாளை பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை, களுத்துறை, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மௌசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீரேந்து பிரதேசங்களில் நேற்றிரவு முதல் இன்று வரை கடும் மழை பெய்துள்ளது.கடும் மழை காரணமாக காசல்ரீ, கென்னியோன் மற்றும் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் … Read more

எரிவாயு சிலிண்டர் விற்பனையில் மோசடி – பொலிசாரிடம் முறையிட முடியும்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் அவற்றின் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. சில விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு ,லிற்றோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக  தெரியவந்துள்ளது. இதனால் இதனை கட்டுப்படுத்தி உரிய விலைக்கு சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும்வகையில் நுகர்வோர் அதிகார சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை … Read more

குருத்தோலை ஞாயிறு புனித வாரம்

தவக் காலத்தின் முக்கிய பகுதியான பரிசுத்த வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகும் பரிசுத்த வாரம் தவக்காலத்தின் மிக முக்கியமான ஏழு தினங்களைக் கொண்டுள்ளது. குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலலூயா சனி, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகியதினங்கள் இந்த பரிசுத்த வாரத்தில் உள்ளடங்குகின்றன. குருத்தோலை ஞாயிறு முதல் ஈஸ்டர் பெருவிழா வரையான ஏழுநாட்களையும் புனிதவாரம் என்றழைக்கினறோம் வருடத்தின் 52வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்றழைக்கவேண்டும்.இயேசு இவ்வுலகில் வாழ்ந்த … Read more