அரச விடுமுறை அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது

நாளை (11) யும் நாளை மறுதின(12) மும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் , மாகாண சபைகள் ,மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே,ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார். இதேவேளை ,வங்கிச் சேவைகள் நாளையும் நாளைமறுதினமும் இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 11ம், 12ம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களின் வசதி கருதி குறித்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி … Read more

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் தற்போதைய நீர் எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானது என்றார்.

தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை  

இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்திற்காக இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் டீசலும், ஒரு லட்சத்து பத்தாயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எரிபொருளுடனான கப்பல்கள் பல அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் … Read more

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 03 – 2022 ஏப்பிறல் (விபரமான பதிப்பு)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் … Read more

பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

ஜேர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 2022 மார்ச் 31ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது. இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார். பிராங்பேர்ட்டில் உள்ள … Read more

IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளூநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்து (IMF)டன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதல் சுற்றுபேச்சுவார்த்தையை நாளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறிது காலம் செல்லலாம். பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவரும் வரையில் மக்கள் அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்;. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சில மாதங்கள் செல்லக்கூடும்  புதிய ஆளுநர் தனது பதவியை நேற்று (08) … Read more