புத்தாண்டுக்கு சதோச மூலம் நிவாரண பொதி

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட … Read more

பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் … Read more

புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் குறித்து பயப்படத்தேவையில்லை

எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறி உள்ளார். இந்த வைரசு இங்கிலாந்தில் மிகவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இது இந்தியாவில் பரவி 4-வது அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிலரது மனதில் எழுந்துள்ளது. ஒமைக்ரோன் வைரஸ் பிரிவுகளின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய 2 வைரஸ்களின் கலவையாக எக்ஸ்இ வைரஸ் உருவாகி இருக்கிறது. இது வேகமாக பரவும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக … Read more

புத்தாண்டு தினங்களில் மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகள் விடுமுறை தினங்கள் என்பதனால் அந்த இரண்டு தினங்களிலும் மின்சாரப் பயன்பாடு குறைவாகவே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் இருந்தால், மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கான … Read more

கொழும்பில் இன்றைய தினம் மாற்று வழிகளை பயன்படுத்தவும்

பண்டிகைக் காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக பெருமளவிலான மக்கள் கொழும்புக்கு வருகைதருவதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காலிமுகத்திடல், கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று  பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.   இதன் காரணமாக இன்று (08) பிற்பகல் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல்  ஏற்படக் கூடும் என்பதனால், வாகனங்களில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.    

சிறுபோக பயிர்ச்செய்கை ஊடாக நமக்குத் தேவையான அரிசியை நாமே பெற்றுக்கொள்ள வேண்டும்

நாட்டில் தற்போது நிலவக் கூடிய நிலைமையை கருத்தில் கொண்டு சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் தமக்குத் தேவையான அரிசியை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அல்லை வியாபார சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டம் நேற்று சேருவில பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது சிறுபோக விவசாய செய்கையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பி;டார் அரசாங்கம் தற்போது சேதன … Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே! வன்முறையை தவிர்க்குமாறு உங்கள் அனைவரிடமும் முதலில் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “அமைதியான போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட … Read more

அரச ஊழியர்களுக்கு ஏப்பிரல் மாத சம்பளம் இன்று

ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றைய தினம் செலுத்தப்படும் என நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்பிரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக 9 ஆயிரத்து 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறினார். ஏப்பிரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி 2 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான 550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த … Read more

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் புதிய செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம். சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (07) பிற்பகல் கையளிக்கப்பட்டன.

பண்டிகைக் காலங்களில் மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, இந்த வார இறுதியில் இருந்து மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒரு தொகை டீசல் கடந்த வாரம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க கூறியதோடு,வெள்ளிக்கிழமை (8) வரை திட்டமிடப்பட்டுள்ள ஆறரை மணி நேர மின்வெட்டு நேரத்தில் எவ்வித … Read more