புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக செயல்படும் இந்த விசேட பஸ் சேவை, பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவர்கள் மீண்டும் திரும்புவதற்கும் பஸ் சேவைக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பஸ்தியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்திற்கு மேலதிகமாக … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ … Read more

தென்கிழக்கு வங்காள விரிகுடா – குறைந்த அழுத்தப் பிரதேசம் ? 

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக மற்றும் கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் … Read more

புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன். … Read more

கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு – 90 கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வருகை தந்து புதிய நீர் இணைப்பிற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளனர். குறித்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் எதிர்வரும் … Read more

பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் கல்வியாண்டின் 3ஆம் தவணை நேற்றுடன் (06) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே. பெரேரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, 2021 கல்வி ஆண்டிற்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவு செய்யப்படவிருந்த நிலையில் தற்போது அதனை நேற்றுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்து கத்தோலிக்க … Read more

கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் – சபாநாயகர்

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் இன்று (06) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்தி பாநாயகர் இதனைத் குறிப்பிட்டார். அரசியல் நோக்கத்தை புறம்தள்ளி இந்த நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு … Read more

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஏப்ரல் 07 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக மற்றும் கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் … Read more

பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலயத்தால் அதிகரிக்கின்றது

அடுத்த தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான (2022) பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு 139 நாட்கள் மட்டுமே இருப்பதனால் பாடசாலை நேரத்தை மேலதிகமாக ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு மணித்தியாலம் நீடிப்பதன் மூலம் சுமார் 20 நாட்கள் கற்பித்தல் காலத்தை கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்பது கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும். கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்வாங்க முடியாத பட்சத்தில் மூன்றாம் தவணையில் … Read more

ரயில்வே திணைக்களம் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு ரயில்வே திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுவதற்கு மின்கலம் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மின் துண்டிப்பு நீண்ட நேரம் இடம்பெறுமாயின் இந்த மின் சமிக்சை கட்டமைப்பு சிலவேளைகளில் செயற்படாது. இதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் சநதர்ப்பங்களில் இவ்வாறான ரயில் கடவைகளின் ஊடாக செல்லும் பொழுது மிகவும் அவதானத்துடன் … Read more