முல்லைத்தீவில் தேசிய கரையோர, கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான (2021) தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் நேற்று (04) நாயாறு கடற்கரையில் இடம்பெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் கொரோனா இடர் காரணமாக இடம்பெறவில்லை. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமானது வருடா வருடம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் … Read more

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ள கொரியா

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கொரியக் குடியரசின் அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கூ யுன்-சியோல், 2022 ஏப்ரல் 01ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய போசன விருந்தின் போது, இருதரப்பு உறவுகளின் முழுமையான வரம்பு மற்றும் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் … Read more

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து  மக்களின் நாளாந்த  தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளமை … Read more

127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்கள்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்களை முறையே 2022 மார்ச் 11, 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று விஷேட கொன்சியூலர் முகாம்களில் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி, கோவை மாவட்டம் பூலுவப்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், அறச்சலூர், சேலம் மாவட்டம் பவளத்தானூர், மதுரை மாவட்டம் ஆனையூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, புழல் ஆகிய இடங்களில் … Read more

நாட்டின் இன்றைய நிலை தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த கட்சி தலைவர்களின் கூட்டம் ஏற்கனவே 12.00 மணிக்கு நடைபெறவிருந்ததாக குறிப்பிட்ட சபாநாயகர் தற்பொழுது 2.00 மணிக்கு கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதாக தெரிவித்தார். இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான அலுவல்களை தொடர்ந்து … Read more

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம்

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, லாவ் காசை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாவ் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் … Read more

வன்முறை ,குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவோர் கைதுசெய்யப்படுவார்கள்

ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படு நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது. எனினும், குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அதேபோல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.