மிரிஹான சம்பவம் கடும்போக்குவாதிகளின் செயற்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு. இதனால் 39 மில்லியன் ரூபா பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை இருந்தாலும், அதனூடாக நாட்டை அராஜகப்படுத்துவதற்கான உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக … Read more

மிரிஹான சம்பவம்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது

மிரிஹான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டில் காணப்படும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மிரிஹான பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற சம்பவம் அதாடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் … Read more

கலவரத்தின் பின்னணியில் அடிப்படைவாதக் குழு…

நுகேகொடை ஜூபிலி சந்தி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் குழுவொன்று கலவரத்தில் ஈடுபட்டு, வன்முறை நிலையை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இரும்புக் கம்பிகள், தடிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பெங்கிரி வத்தையில் உள்ள ஜனாதிபதி அவர்களின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் என உறுதியாகியுள்ளது. அவர்கள் அரபு … Read more

இலங்கை, நேபாள வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் புதிய ஒத்துழைப்பின் பகுதிகளாக விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பு

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டையொட்டி, நேபாள வெளியுறவு அமைச்சர் கலாநிதி நாராயண் கடகா, 2022 மார்ச் 30ஆந் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, தொடர்ந்தும் விருத்தியடைந்து வரும் இருவழிப் பிணைப்பு குறித்து இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் திருப்தி தெரிவித்ததுடன், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், ஐக்கிய … Read more

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் மறைவு  –  பிரதமரின் இரங்கல் செய்தி 

அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரி அரசியலின் செயற்பாட்டாளரான அதாவுத செனவிரத்ன அவர்கள், லங்கா சமசமாஜக் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். ஆசிரியராக கடமையாற்றி வந்த அதாவுத செனவிரத்ன அவர்கள், 1954 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்தார். 1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, லங்கா சமசமாஜக் … Read more

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை … Read more

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்படும் 

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.   வேகமாக அதிகரித்து வருகின்ற  கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் தற்போயை நிலவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக  கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு … Read more

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றம் விஜயம்

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) உள்ளிட்ட பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர். நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவி செனட் உறுப்பினர் அனிக் ஜக்மன்ட் (Annik Jacquemet), சங்கத்தின் உறுப்பினர் அலன் ஹூபர்  (Alain Houpert) மற்றும் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் திருமதி. ஏன் லோரா (Anne Laure) உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.   பிரதிநிதிகள் … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு மாகாணத்தை தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more