பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சவுதி அரேபியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 மார்ச் 19 முதல் 21 வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது இருதரப்பு விஜயத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமட் அல்-ஜுபைருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்…

மூன்று நாள்  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வந்துள்ளார். திரு. ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்,  உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை … Read more

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்கள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் என்று சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து … Read more

கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைவாக கடலில் விபத்துக்குள்ளாகும் படகுகளுக்கு உதவி வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கு அருகாமையில், கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி தற்பொழுது கடமையில் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் கைப்பற்றப்படும் உள்ளூர் கடற்றொழில் படகுகள் மற்றும் நாட்டின் கடல் எல்லையை மீறும் கடற்றொழில் படகுகள் தொடர்பில் இந்தத் வேலைத்திட்டத்தின் போது விசேட … Read more

முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். INTERNATIONAL BRAVE BOXING COUNCIL  நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர். இலங்கை அணி வீரர்கள் சார்பாக  வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர். நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர்  வெள்ளி … Read more

ஜனாதிபதி தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தின் ஊற்பாட்டின் கீழ் ஐந்தாவது பிம்ஸ்ரெக் மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமாகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மகாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மூன்று நாட்களுக்கு நடைபெறும். பிம்ஸ்ரெக் சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு மற்றும் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்ளாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பிம்ஸ்ரெக் கொள்கைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுடன் உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும். … Read more

அடுத்த மாதம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் புதிய ரயில் சேவை

வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் தொடக்கம் இந்த புதிய கடுகதி ரெயில் சேவை ஆரம்பமாகவுள்ளது. இந்த ரெயில் வெள்ளவத்தையில் இரவு 10.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதன் பின்னர் அதிகாலை 5.30ற்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் என்று ரெயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முழுமையாக குளிரூடப்பட்டுள்ள இந்த ரெயில் 500 ஆசனங்களைக் கொண்டுள்ளது. ரெயில்வே திணைக்களத்தின் கையடக்க செயலியின் மூலம் ஆசனங்களை … Read more

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

புத்தாண்டு காலப்பகுதியில் கடைகள் மற்றும் வீதிகளில் ஏற்படக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். பெறுமதி மிக்க உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விசேடமாக தாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் … Read more

இந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவு 

இந்தியாவில் நாளாந்த கொரோனா வைரசு தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவடைந்துள்ளது.  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை இந்திய சுகாதாரத்துறை இன்று (27) வெளியிட்டது. அதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,660-ஐ விட சற்று குறைவாகும். இதனால், இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது. நாடு … Read more

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு முன்னாள் பெண் போராளிக்கு ..

பருத்திதுறையில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது கணவருடன் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் முன்னாள் எல்டீடீ போராளியொருவருக்கு அவரது வறுமை நிலையை கருத்தில் கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மனிதாபிமான அடிப்டையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திங்கட்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பினூடாக கொழும்பு றோயல் கல்லூரியின் (1980 தமிழ் மொழித் பிரிவு) முன்னாள் மாணவரான கலாநிதி வல்லிபுரம் சிவகுமார் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, … Read more