மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவில் கலந்துகொள்ளாமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு வருத்தம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி உயரதிகாரிகள் மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை தொடர்பில் வருந்துவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (24) கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட … Read more