இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையை ஜனாதிபதி பார்வையிட்டார்…

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும். இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய … Read more

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றன – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றது – இலங்கை மத்திய வங்கி அறிக்கை முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.  

யாழ்ப்பாணத்தில் 'நீதிக்கான அணுகல்' – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  கலந்துரையாடல்

இவ்வருட முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விஷேட நடமாடும் சேவையின் போது யாழ்ப்பாண மக்களால் இரு அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, 2022 மார்ச் மாதம் 21ஆந் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வனவிலங்கு சரணாலயங்களின் எல்லைகள், யாழ்ப்பாணத்தில் கரையோரப் பாதுகாப்பு ஒதுக்கீடு, … Read more

ரஷ்யாவில், இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை

ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்தி சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை, ரஷ்யாவிற்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதாக தேயிலை சபை தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாற்று … Read more

போலந்து பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்புச் செயலர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கேர்ணல் கிராப்ஸ்கி மற்றும் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கு … Read more

பாகிஸ்தான் இராணுவ அணி ஸ்பிரிட் (PATS) போட்டியில் இராணுவ அணி வெள்ளி பதக்கம் வென்றது

கரியனில் உள்ள பாகிஸ்தானின் இராணுவ தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான 5 வது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ அணி ஸ்பிரிட் (PATS) போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவ அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த போட்டி மார்ச் 3 முதல் 13 வரை நடைபெற்றது, இதில் 16 க்கும் மேற்பட்ட சர்வதேச அணிகள் போட்டியிட்டன. நேபாளம், துருக்கி, மொராக்கோ, உஸ்பெகிஸ்தான், பஹ்ரைன், கென்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் … Read more

தோஹாவில் என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கை பங்கேற்பு

ஜி.சி.சி. சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்குடன் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2022 மார்ச் 10 முதல் 14 வரை நடைபெற்ற கத்தாரின் 9ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சியான அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முதன்முறையாக தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மேற்கொண்டது. இலங்கைத் தூதரகம் இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது. ட்ரட்லங்கா அக்ரிகல்சரல் எண்டர்பிரைசஸ் … Read more

தூதுவர் கனநாதன் கினியாவில் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கென்யாவில் வதியும் கினியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தனது நற்சான்றிதழை 2022 மார்ச் 11ஆந் திகதி கொனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கினியாவின் ஜனாதிபதி மாமடி டூம்பூயாவிடம் வழங்கினார். நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததன் பின்னர், இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் பொதுவான நலன்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு சுருக்கமான சந்திப்புக்கு இலங்கைத் தூதுவரை ஜனாதிபதி டூம்பூயா அழைத்திருந்தார். கினியாவில் நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளஇலங்கையின் முதலாவது தூதுவராக தூதுவர் … Read more

சேர் பெறுமதி வரி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சேர் பெறுமதி வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (22) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212  மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. … Read more

தேர்தல் முறைமை தொடர்பான நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்

உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில்  (22) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் … Read more