காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது  

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானிகளுக்குப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கமைய காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய காணி அமைச்சரினால் விதிக்கப்பட்ட, 2021 ஒக்டோபர் 28ஆம் திகதிய 2251/48ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07ஆம் திகதிய 2266/5ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி ஒழுங்கு … Read more

இலங்கைத் தூதுவர் ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவருடன் சந்திப்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம். விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு, ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அப்டோல்நேசர் டெரக்ஷனை 2022 மார்ச் 13ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தார். பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் தூதுவரை வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் இருதரப்புத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான பெறுமதியான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். வர்த்தகம், தொழில், விவசாயம், எரிசக்தி, விஞ்ஞானம் மற்றும் … Read more

நடுத்தர ஆடைத் தொழில் துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி

நாடு முழுவதும் உள்ள 50 தையல் இயந்திரங்கள் அல்லது 50 ஆட்களுக்கும் குறைவாக கொண்ட சிறிய ஆடைத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் ஆடை துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்காகவும், அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றத்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் நோக்கம்  ,இறுதியில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க கூடிய அளவு மாபெரும் ஏற்றுமதியாளர்களாக மேம்படுத்துவதே என அவர் மேலும் கூறியிருந்தார். ‘இது … Read more

இந்திய பிரதமருக்கு ,கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நன்றி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த கடன் உதவி தொடர்பில் நன்றி தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், எதிர்காலத்திலும் இந்திய அரசாங்கம், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் என எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் ஊடக பிரிவு

இலங்கையில் கொரிய முதலீடுகள்: முதலீட்டு சபை தலைவர் கொரிய தூதுவருடன் கலந்துரையாடல்

கொரிய தூதர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் (Santhush Woonjin Jeong) , இலங்கை முதலீட்டு சபை தலைவரான ராஜா எதிரிசூரியவை சந்தித்தார். முதலீட்டுச் சபை வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ,எதிரிசூரிய இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், கொரிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. கொரியாவிலிருந்து அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தற்போதுள்ள கொரிய முதலீட்டாளர்களின் முயற்சிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது தொடர்பாகவும், … Read more

ஜிட்டல் மயப்படுத்தப்பட்ட 1919 அரச தகவல் நிலையத்தின் தொடர்ச்சியான விரிவு படுத்தப்பட்ட சேவை

அரச தகவல் நிலையம் பொது மக்களுக்கு அரச நிறுவகங்களின் தகவல்களை வழங்கும்  24 மணித்தியாலங்கள் செயல்படும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இதுவரையில் இருந்த 1919 துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக உடனடி தகவல் சேவை ( Instant messenger   ) வெப் விட்ஜெட் வசதி ( web widgets   ) முகநூல் மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து தகவல்களை கேட்டறிவதற்கு … Read more

அமெரிக்க அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) அவர்கள் இன்று, (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும்  ஜனாதிபதி அவர்கள், திருமதி நூலண்ட் அவர்களிடம் தெரிவித்தார். சைபர் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்..    உதவிச் … Read more

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணையுங்கள்… – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார் மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும். அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல… கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வருகை தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி… பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அழைப்பு… … Read more