News LK
“சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்
“சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவித்தார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ வசந்த யாப்பாபண்டார, கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர … Read more
பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக 51 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தன. குழு நிலை விவாதத்தின் போது பல்வேறு திருத்தங்களுடனும் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 3வது வாசிப்பின் போது வாக்கெடுப்பின்றி இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை முக்கிய அம்சமாகும். பயங்கராதத்தைக் கட்டுப்படுத்த இவ்வாறான சட்டங்கள் அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இணையவழி தாக்குதல்கள், புனர்வாழ்வு என்பன … Read more
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் உலக நீர் தின நிகழ்வு…
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று, (22) பிற்பகல் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “நிலத்தடி நீர் : புலப்படாததை புலப்படச் செய்யும்” (Groundwater making the invisible visible) என்பதாகும். இதன் மூலம் நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களின் தழுவலுக்கு நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை … Read more
நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையின் மீளாய்வு விசேட உயர்மட்ட கலந்துரையாடல்
வட மாகாண மக்களின் சட்ட ரீதியான சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையின் மீளாய்வு விசேட உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (21) வெளியுறவுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற வடக்கு மாகாண மக்களின் காணி, வனவள, வனஜீவராசிகள், கடற்றொழில், கரையோர பாதுகாப்பு, கடல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான முறைப்பாடுகள் … Read more
ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை
கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு ஆர்ப்பாட்டங்களின்போதும், ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் வகையில் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more
நிதி நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு செயற்படுவது தொடர்பில்
தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற பொருளாதார சபை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்க்ஷவும் இதில் கலந்து கொண்டார். இது தொடர்பாக ஊடகவியலாளர் … Read more
இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் கட்டாரின் தூதுவர் அல் சொரூர் கலந்துரையாடல்
கட்டார் அரசின் தூதுவர் மாண்புமிகு ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 21ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் நல்கிய வலுவான ஆதரவையும் இலங்கைக்கான பச்சாதாப அணுகுமுறையையும் பாராட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால … Read more
இன்றைய (22.03.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
'பல்கலைக்கழகங்களில் பகிடிவதை” குறித்து புதிய ஆய்வு அறிக்கை
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய .ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய , புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. “அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை ,பால் நிலையை … Read more